ஆளுநர் ரவியை அடக்கணும்..! நிதியில் தமிழ்நாட்டுக்கு பட்டை, நாமம் தான்… முதல்வர் ஸ்டாலின் அனல் பேச்சு…!
ஈரோட்டில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநர் ரவியையும், மத்திய அரசையும், எடப்பாடி பழனிச்சாமியையும் கடுமையாக சாடினார்.
ஈரோடு மாவட்டம் சோலார் பகுதியில் 605 கோடி ரூபாயில் முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்ததுடன் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது, தமிழகத்திற்கான திட்டங்களை நிராகரிக்கும் போது மத்திய அரசு கம்பி கட்டும் கதையை கூறுவதாக கூறினார். தன்னை விவசாயி எனக் கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி தமிழக விவசாயிகளுக்காக பிரதமரை சந்திக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். எடப்பாடி பழனிச்சாமி மேற்கு மண்டலத்திற்கு செய்த பச்சை துரோகங்களில் லேட்டஸ்ட் அடிஷன் கோவை மெட்ரோ ரயில் திட்டம் ரத்தானது என்று கூறினார்.
பாஜக ஆட்சியில்தான் பகல்ஹாம் தாக்குதல், செங்கோட்டை தாக்குதல் நடந்திருப்பதாக கூறினார். ஆளுநர் ஆர். என். ரவி திமிருடன் பேசுகிறார் என்றும் அவரது திமிரை அடக்க வேண்டும் என்றும் கூறினார். தமிழ்நாட்டு மாணவர்கள் ஆங்கிலம் படிப்பதால் ஆளுநருக்கு ஏன் வயிறு எரிகிறது என்ற கேள்வி எழுப்பினார். எடப்பாடி விவசாயி அல்ல என்றும் உழவர்களுக்கு துரோகம் செய்யும் துரோகி என்றும் விமர்சித்தார். தமிழ்நாட்டில் பாதுகாப்பு பிரச்சனை இருப்பதாக ஆளுநர் ரவி அவதூறு பரப்புகிறார் என்று கூறினார்.
இதையும் படிங்க: தந்தை பெரியார் இல்லைனா... ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆரவாரப் பேச்சு...!
தமிழ் மொழி பற்றி குறித்து எங்களுக்கு ஆளுநர் பாடம் எடுக்க வேண்டாம் என்றும் தெரிவித்தார். மொழிப்பற்றில் நாங்கள் phd பெற்றவர்கள் என்று கூறினார். மக்களுக்கும் திமுக அரசுக்கும் இருக்கும் பிணைப்பை கெடுக்க சதி செய்கிறார்கள் என்றும் கூறினார். வரி வசூலிப்பதற்கு மட்டும் தமிழ்நாடு என்றும் நிதி ஒதுக்கும்போது பட்டை, நாமம் பாஜக போடுகிறது என்றும் தெரிவித்தார். வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் இருப்பதை அனைவரும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக அரசின் சட்டத்திற்கு எப்போதும் வெற்றிதான்... மாவீரன் பொல்லான் சிலையை திறந்து வைத்த முதல்வர் பெருமிதம்...!