×
 

விவசாய திட்டங்களில் தமிழ்நாடு முன்னோடி... திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்...!

விவசாய திட்டங்களில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கள ஆய்விற்காக முதலமைச்சர் ஸ்டாலின் சென்று உள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் முடிவற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தவுடன் 314 திட்டப்பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். 46 புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டியிருக்கிறார். 2095 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைத்துள்ளார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், உலகத்தை பசுமையாக்கிய ஒவ்வொருவருக்கும் உணவளிக்கும் விவசாயிகளால் சிந்தனையும் பசுமையாகி இருக்கிறது என்று தெரிவித்தார்.

உழவர்களின் பின்னால்தான் நாம் ஒன்றிணைந்து இருக்கிறோம் என்பதை காட்டும் விழா இது எனவும் தெரிவித்தார். நமது வேளாண்மையை உலக தரத்திற்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கான திட்டங்களில் தமிழ்நாடு முன்னோடியாக இருக்கிறது என்றும் அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்து உள்ளது மற்றும் அந்த வளர்ச்சி வேளாண் துறைக்கும் வந்து சேர வேண்டும் எனவும் கூறினார்.

இதையும் படிங்க: வாக்குறுதியை நிறைவேற்ற வக்கில்ல... போராட விட்டு வேடிக்கை பார்ப்பதா? இபிஎஸ் கண்டனம்...!

தொழில்நுட்ப வளர்ச்சி விவசாயிகளை சென்று சேர்ந்தால்தான் அது உண்மையான வளர்ச்சியாக இருக்கும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். சாகுபடி பரப்பை அதிகரித்தோம் என்றும் நீர்நிலைகளை தூர்வாரினோம் என்றும் அதிகளவில் கொள்முதல் செய்வதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். தொழில்நுட்பங்களை தேடி விவசாயிகள் அலையக்கூடாது என்பதற்காக தான் வேளாண் கண்காட்சியை கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஹேப்பி நியூஸ்... கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்... ஜன.5ல் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share