×
 

ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிப்பவர் சேகர்பாபு... புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்...!

ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிப்பவர் சேகர்பாபு என முதலமைச்சர் ஸ்டாலின் புகழ்ந்தார்.

சென்னை பெரம்பூரில் அமைந்துள்ள முரசொலி மாறன் பூங்காவில் எட்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புணரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்ட பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மேலும், பள்ளிகள் மற்றும் மைதானங்கள் ஆகியவற்றையும் முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார். மேலும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு திட்ட பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

இதனை அடுத்து அனிதா அகாடமியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை புகழ்ந்தார். ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிப்பவர் சேகர்பாபு என்றார்.

அனிதா அகாடமி நிகழ்ச்சிக்கு வந்ததால் களைப்பு விடுபட்டு உற்சாகம் வந்துள்ளது என்றார். கடமையை வேகமாக நிறைவேற்ற வேண்டும் என்ற உத்வேகம் வந்துள்ளது என்றும் என் உடலில் உயிர் இருக்கும் வரை தனது கடமையை நிறைவேற்றுவேன் எனவும் தெரிவித்தார். நான் இருக்கிறேன் கவலைப்பட வேண்டாம் என்று மாணவர்களுக்கு நம்பிக்கையை கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின், கலைஞர் கற்றுத் தந்த உழைப்பை வைத்து உங்களுக்காக கடமை ஆற்றுவேன் என உறுதியளித்தார்.

இதையும் படிங்க: சூப்பரா பண்றீங்க ஸ்டாலின்... பாராட்டிய ஹண்டே... நேரில் சந்தித்து உரையாடிய முதல்வர்...!

தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப உங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கல்விதான் கடைசிவரை துணை இருக்கும் எனவும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். கல்வியால் பெறப்படும் அறிவை கொச்சைப்படுத்த பலர் முயற்சிக்கிறார்கள் என்றும் கவர்ச்சியான வார்த்தைகளை கூறி பின்னோக்கி இழுத்துச் சென்று விடுவார்கள் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரித்தார்.

இதையும் படிங்க: ரூ. 8 கோடியில் முரசொலி மாறன் பூங்கா சீரமைப்பு... பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share