×
 

மதுரை குலுங்க...குலுங்க... நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்...!!

மதுரையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெயர் சூட்டப்பட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் இன்று திறந்துவைக்கவுள்ளார்.

மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் சாலை மேம்பாலப் பணிகள் தமிழக முதல்வரால் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த பாலம் மதுரை மாநகரின் வடபகுதியையும், தென்பகுதியையும் இணைக்கும் விதமாக அமைக்கப்பட்டு வருகிறது. பாலத்தின் ஏறுதளம் தமுக்கம் பகுதியில் தொடங்குகிறது. கோரிப்பாளையம் சந்திப்பை கடந்து நெல்பேட்டை அண்ணா சிலை சந்திப்பில் முடிகிறது. வைகை ஆற்றில் தற்போதைய ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்திற்கு இணையாக புதிதாக உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 

213 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த பாலத்திற்கு, இடைக்கால பட்ஜெட் தாக்கலின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பாலத்திற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயர் சூட்டப்படும் என அறிவித்தார். இந்த பாலம் மூலம் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தும் முக்கிய சாலைச் சந்திப்புகளில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல் குறையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கோரிப்பாளையம், யானைக்கல், தமுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உச்ச நேரங்களில் நீண்ட நேரம் வாகனங்கள் நின்று செல்லும் நிலை நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கோரிப்பாளையம் சந்திப்பில் இருந்து செல்லூர் நோக்கி கூடுதலாக ஒரு இணைப்பு பாலமும் அமைக்கப்பட உள்ளது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் எளிதாக மாற்று வழிகளில் செல்லும் வசதி ஏற்படும். பாலத்தின் கீழ் இருபுறங்களிலும் சேவை சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் உள்ளூர் போக்குவரத்தும், மேம்பாலம் வழியாகச் செல்லும் நீண்ட தூர போக்குவரத்தும் தனித்தனியாக சீராக இயங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: சாதி வன்மம்... அமைச்சர் மூர்த்தி உருவபொம்மை எரிக்க முயற்சி... மதுரையில் பதற்றம்..!

மேலும் கூடுதலாக ஒரு இணைப்பு பாலம் கோரிப்பாளையம் சந்திப்பில் இருந்து செல்லூர் நோக்கி அமைய உள்ளது. பாலத்தின் கீழ் இருபுறமும் சேவை சாலை அமைக்கப்பட உள்ளது. இச்சாலை மேம்பாலத்தினால் மதுரை மாநகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். இந்த புதிய மேம்பாலத்தை வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயர் சூட்டப்படுவதால், இந்த பாலம் வரலாற்று சிறப்புமிக்க பெயருடன் மதுரை மாநகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: "பத்து தோல்வி பழனிச்சாமி... மொத்த தோல்வி மோடி!" சென்னை 'Loading 2.0' மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share