×
 

பேண்ட் ஜிப்பை திறந்து காட்டிய கேரள போலீஸ்... சபரிமலையில் தெலுங்கு பத்தர்களுக்கு நேர்ந்த அவமானம்... கொந்தளிந்த ஆந்திர எம்.எல்.ஏ...!

கேரள போலீஸ் இடம் உதவி கேட்ட ஆந்திர மாநில பக்தர்கள் மிகவும் கீழ்த்தரமான வகையில் அவமதிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சபரிமலைக்கு ஐயப்பனை தரிசிக்க சென்ற ஆந்திர மாநில பக்தர்கள் பக்தர்கள் பெரும் அவமானத்திற்கு ஆளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. எனவே ஐயப்பனை தரிசிப்பதற்காக கேரளா மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பனை தரிசிக்க ஆயத்தமாகி வருகின்றனர். கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவதால் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் நிலவி வருகிறது.

இதனால் நீண்ட வரிசையில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வரிசை எங்கே ஆரம்பிக்கிறது என்பதை கண்டுபிடிப்பதே பக்தர்களுக்கு மிகப்பெரிய குழப்பமாக அமைந்துள்ளது. இதனால் சபரிமலை செல்லும் பக்தர்கள் தரிசனத்திற்கு எந்த வழியாக செல்வது என தெரியாமல் குழம்பி வருகின்றனர். அப்படி தரிசனத்திற்கு எந்தப் பக்கம் செல்வது என தெரியாமல் கேரள போலீஸ் இடம் உதவி கேட்ட ஆந்திர மாநில பக்தர்கள் மிகவும் கீழ்த்தரமான வகையில் அவமதிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க: கட்டுக்கடங்காத கூட்டம்... ஐயப்ப பக்தர்களின் உயிர் காக்க தேவசம் போர்டு எடுத்த அதிரடி முடிவு...!

மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சில ஐயப்ப பக்தர்கள் சமீபத்தில் சபரிமலைக்குச் சென்றபோது, ​​தரிசனத்திற்கான வரிசை எங்கே? என கேரள காவல்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டுள்ளனர். உடனே அவர் தனது பேண்ட் ஜிப்பைத் திறந்து ஆபாச சைகைகளைச் செய்ததாக ஐயப்ப பக்தர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். காவல்துறை அதிகாரி செய்த சைகைகளின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது, மேலும் கடுமையான விமர்சனங்களை ஈர்த்து வருகிறது. இதன் மூலம், காவல்துறை அதிகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏராளமான இணையவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மறுபுறம், சபரிமலை யாத்திரையின் போது தெலுங்கு மாநிலங்களில் இருந்து சென்ற பக்தர்களிடம் அங்குள்ள போலீசார் தவறாக நடந்து கொண்டதாக வெளியான செய்திகள் மற்றும் வீடியோக்களால் அதிர்ச்சியான எம்எல்ஏ ராஜா சிங் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த ஐயப்ப பக்தர்களிடம் தவறாக நடந்து கொண்ட கேரள போலீசார் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜி சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் சபரிமலைக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு முறையாக வழி காட்டவும், தேவையான தகவல்களை வழங்கவும் ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்க வேண்டும் எனவும் தெலுங்கானா மற்றும் ஆந்திர முதல்வர்கள் ரேவந்த் ரெட்டி மற்றும் நாரா சந்திரபாபு நாயுடு ஆகியோரிடம் எம்எல்ஏ ராஜா சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

வீடியோவைக் காண

இதையும் படிங்க: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... "படிகளை தொட்டு வணங்க வேண்டாம்"... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share