×
 

பீகார் தேர்தலுக்காக இந்தியாவையே ஏமாற்றும் மோடி..! திமுறி அடிக்கும் திமுக..!

பொத்­தாம் பொது­வாககொள்கை முடிவு போல் அறி­வித்­துள்­ளார்­களே தவிர, செயல் முடி­வாக அறி­விக்­க­வில்லை

''நிதீஷ் குமாரை வைத்து பீகாரை அப­க­ரிக்­க­லாம் என்று நினைத்­தார்­கள். அது தேறாது என்று          தெரிந்­த­தும்,   சாதி­வா­ரிக் கணக்­கெ­டுப்பு நடத்­து­கி­றோம் என்று கிளம்பி இருக்­கி­றார்­கள்'' என மோடி அரசை விமர்சித்துள்ளது திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி.

''பீகாருக்காக மாபெரும் பொய்'' என்கிற தலைப்பில் முரசொலி வெளியிட்டுள்ள தலையங்கத்தில்,    ''மக்­கள் தொகைக் கணக்­கெ­டுப்­பு­டன் சாதி­வாரி கணக்­கெ­டுப்பு நடத்த வேண்­டும் என்று                 சொன்­ன­போ­தெல்­லாம் அதை, ‘நக்­ச­லைட் பார்வை’ என்று சொல்லி வந்த பிர­த­மர் மோடி. இப்­போது திடீ­ரென மனம் மாறி­யது ஏன்? எதற்­காக?  என்­றால் பீகார் தேர்­த­லுக்­காக நடத்­தப்­ப­டும் நாட­கம் இது. நிதீஷ் குமாரை வைத்து பீகாரை அப­க­ரிக்­க­லாம் என்று நினைத்­தார்­கள். அது தேறாது என்று              தெரிந்­த­தும், சாதி­வா­ரிக் கணக்­கெ­டுப்பு நடத்­து­கி­றோம் என்று கிளம்பி இருக்­கி­றார்­கள்.

2023 ஆம் ஆண்டு தெலுங்­கானா மாநி­லத்­தில் பரப்­புரை செய்ய வந்த பிர­த­மர் மோடி அவர்­கள்,            “சாதி­வாரி கணக்­கெ­டுப்பு நடத்தி மக்­கள் தொகை அடிப்­ப­டை­யில் சமூ­கங்­க­ளுக்கு பிர­தி­நி­தித்­து­வம் வழங்க வேண்­டும் என காங்­கி­ர­சுக் கட்சி சொல்­கி­றது. அடுத்­த­தாக தொகுதி மறு­வ­ரை­யறை நடக்க உள்­ளது. காங்­கி­ர­சுக் கட்சி சொல்­வ­தைப் போல மக்­கள் தொகை­யின்அடிப்­ப­டை­யில் மக்­க­ள­வைத் தொகு­தி­கள் மறு­வ­ரை­யறை செய்­யப்­பட்­டால்,தென் மாநி­லங்­கள் 100 தொகு­தி­களை இழக்க நேரி­டும். தென்­னிந்­திய மக்­கள் இதனை ஏற்­பார்­களா?” என்று கேட்­டார் பிர­த­மர். காதைச் சுற்றி மூக்­கைத் தொட முயற்­சித்­தார் பிர­த­மர். சாதி­வாரி கணக்­கெ­டுப்பு, மக்­கள் தொகை கணக்­கெ­டுப்பு நடத்­தி­னால்           தொகு­தி­கள் குறை­யும் என்று முத­லில் மிரட்­டி­ய­வர் அவர் தான். அத்­த­கைய பிர­த­மர் மோடிக்கு திடீர் மன­மாற்­றம் ஏன் வந்­தது? எத­னால் வந்­தது?

இதையும் படிங்க: மோடி ஆட்சியின் மர்மம்... சோனியாவின் 'தெரியாத' நோய் மறைந்தது எப்படி..? அதிர்ச்சி பின்னணி..!

சாதி­வா­ரிக் கணக்­கெ­டுப்பு நடத்த வேண்­டும் என்று தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் கடந்த ஆண்டு ஜன­வரி மாதமே தீர்­மா­னம் கொண்டு வந்­தார் முத­ல­மைச்­சர் மாண்­பு­மிகு மு.க.ஸ்டாலின் அவர்­கள். அந்த                  தீர்­மா­னத்தை உட­ன­டி­யாக பிர­த­மர் நரேந்­திர மோடிக்கு அனுப்­பி­யும் வைத்­தி­ருந்­தார்.

“இந்­திய மக்­கள் அனை­வ­ருக்­கும் கல்வி, பொரு­ளா­தா­ரம், வேலை­வாய்ப்பு ஆகிய அனைத்­தி­லும் சம உரி­மை­யும், சம வாய்ப்­பும் கிடைப்­பதை உறுதி செய்­யும் வகை­யில் திட்­டங்­க­ளைத் தீட்டி, சட்­டங்­கள் இயற்ற வழி­வகை செய்ய சாதி­வா­ரி­யான மக்­கள்­தொகை கணக்­கெ­டுப்பு அவ­சி­யம் என்று இப்­பே­ரவை கரு­து­கி­றது. எனவே 2021–ஆம் ஆண்டு மேற்­கொண்­டி­ருக்க வேண்­டிய மக்­கள்­தொ­கைக்                         கணக்­கெ­டுப்பை உடனே தொடங்க வேண்­டு­மென்­றும், அத்­து­டன் இந்த முறை சாதி­வா­ரி­யான                    கணக்­கெ­டுப்­பை­யும் இணைத்தே நடத்­த­வேண்­டும் என்­றும் ஒன்­றிய அரசை இப்­பே­ரவை ஒரு­ மன­தாக  வலி­யு­றுத்­து­கி­றது” என்­ப­து­தான் தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னம் ஆகும். இந்த 15 மாத­மாக ஒன்­றிய அரசு என்ன செய்து கொண்­டி­ருந்­தது? ஏன் அதனை ஒப்­புக் கொள்­ள­வில்லை?

கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லின் போதே, ‘இந்­தியா கூட்­டணி ஆட்­சிக்குவந்­தால் சாதி­வா­ரிக்                  கணக்­கெ­டுப்பை நடத்­து­வோம்’ என்று முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் சொல்லி வந்­தார்­கள். ராகுல் காந்தி அனைத்­துக் கூட்­டங்­க­ளி­லும் இத­னைச் சொல்லி வந்­தார். “எங்­கள் கூட்­டணி ஆட்­சிக்கு வந்­தால் சாதி­வாரி கணக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டும். 70 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு நாடு எடுக்­கும் மிக­               முக்­கி­ய­மான நட­வ­டிக்­கை­யாக இது இருக்­கும். இந்த கணக்­கெ­டுப்­பின் மூலம் நாட்­டின் தற்­போ­தைய நிலை எவ்­வாறு உள்­ளது என்­பதை அறிந்து கொள்ள முடி­யும். 

அதன்­பி­றகு தான் நாடு அடுத்து எந்த திசை­யில் பய­ணிக்க வேண்­டும் என்­பதை மதிப்­பீடு                 செய்யமுடி­யும். எனக்கு சாதி­யில் ஆர்­வம் இல்லை, நியா­யத்­தில் ஆர்­வம் உள்­ளது. சாதி­வாரி             கணக்­கெ­டுப்பு நடத்­தி­னால் 90 விழுக்­காடு மக்­க­ளுக்கு நியா­யம் கிடைத்தே தீரும்” என்று சொன்­னார் ராகுல். அப்­போ­தெல்­லாம் இதனை ஏற்­கா­த­வர் பிர­த­மர் மோடி அவர்­கள். அவர் மூன்­றா­வது              முறை­யாகஆட்­சிக்கு வந்து ஓராண்டு காலம் ஆகப் போகி­றது. இந்த ஓராண்டு கால­மும் இதைக்             கண்­டு­கொள்­ளா­மல்­தான் இருந்­தார்.

மக்­கள் தொகைக் கணக்­கெ­டுப்­புச் சட்­டம், அதா­வது, மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்படி 1948–ன்கீழ் ஒன்­றிய அரசு தான் இந்­தப் பணி­யைச் செய்ய வேண்­டும். அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டம் பிரிவு 246–ன்படி மக்­கள்­தொகை கணக்­கெ­டுப்பு ஒன்­றிய அர­சின் பட்­டி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ளது. 10                 ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை மேற்­கொள்ள வேண்­டிய அடிப்­ப­டை­யான பணி அது. மக்­கள்­தொகை                    கணக்­கெ­டுப்­பினை 2021–ஆம் ஆண்டு மேற்­கொண்­டி­ருக்க வேண்­டும். அதைச் செய்­ய­வில்லை பா.ஜ.க. அரசு. அதற்­கான எந்த முயற்­சி­யும் 2025வரை எடுக்­க­வில்லை. இப்­போது திடீ­ரென்று                  ஞானோ­த­யம்       எத­னால் வந்­தது?

பிரிட்­டிஷ் அரசு சாதி­வாரி கணக்­கெ­டுப்பை 1931 ஆம் ஆண்டு எடுத்­தது. அதன்­பி­றகு எடுக்­கப்­பட்­டவை அனைத்­தும் மக்­கள் தொகை கணக்­கெ­டுப்­பு­கள்­தான். காங்­கி­ரஸ் அரசு 2011 ஆம் ஆண்டு சாதி வாரி கணக்­கெ­டுப்புநடத்­தி­யது. ஆனால் அதனை அவர்­கள் வெளி­யி­ட­வில்லை. வெளி­யி­ட­லாம், வெளி­யி­டக் கூடாது என்று அமைச்­ச­ர­வைக்­குள் இரு­வேறு கருத்­துக்­கள் ஏற்­பட்­டது. 2014 ஆம் ஆண்டு அவர்­கள் ஆட்சி முடிந்­தது. அடுத்து வந்த பா.ஜ.க. அரசு அது குறித்து முடிவே எடுக்­க­வில்லை. 2021 ஆம் ஆண்­டில் கொரோனா பெருந்­தொற்றை கார­ண­மாக்கி மக்­கள் தொகை கணக்­­கெடுப்பை பா.ஜ.க. அரசு                    நடத்­தவில்லை. சமூ­கத்­தில் அனைத்து பிரி­வி­ன­ருக்­கும் அவர்­க­ளது எண்­ணிக்­கைக்கு தகுந்த                உரி­மை­கள் கிடைக்க வேண்­டும் என்­பதை ஏற்­றுக் கொள்­ளாத உயர் வகுப்­பி­னர் அமைப்­பாக பா.ஜ.க. இருப்­ப­தால் தான் இதில் அக்­கறை காட்ட மறுத்து வந்­தது பா.ஜ.க.

பெண்­க­ளுக்கு 33 விழுக்­காடு இட­ஒ­துக்­கீடு கொடுத்­த­தாக பீற்­றிக் கொள்­கி­றார்­கள். மக்­கள் தொகை கணக்­கெ­டுப்பு முடிந்­த­பி­றகு, தொகுதி மறு­வ­ரை­யறை முடிந்த பிறகு என்று அதற்­கும் கால அளவு  வைத்­து­ விட்­டார்­கள். இவை இரண்­டும் முடிய இன்­னும் பத்­தாண்­டு­கள் ஆகும் என்­பதை அனை­வ­ரும் அறி­வோம். பெண்­க­ளுக்கு உரிமை தரக் கூடாது என்று நினைக்­கும் கட்சி தான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.    கும்­பல்.

அந்த வகை­யில் சாதி­வாரி கணக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டும் என்று இப்­போதுசொல்­வ­தும்                                 கண்­து­டைப்­பு­தான். அதற்­கான நிதி ஒதுக்­கப்­ப­ட­வில்லை. எப்­போது தொடங்­கும் என்­றும்                          சொல்­லப்­ப­ட­வில்லை. பொத்­தாம் பொது­வாககொள்கை முடிவு போல் அறி­வித்­துள்­ளார்­களே தவிர, செயல் முடி­வாக அறி­விக்­க­வில்லை'' எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பலரின் தூக்கம் கெட்டுவிடும்! I.N.D.I.A கூட்டணிக்குள் வெடி வைத்த மோடி பினராயி விஜயன் ஷாக்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share