×
 

அரசியலமைப்புச் சட்டத்தில் அளப்பரிய அறிவு கொண்டவர்.. துணை ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் இந்திய துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இந்திய துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஜெகதீப் தன்கர் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வாழ்த்தி உள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,நமது துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்., முன்னணி வழக்கறிஞராக அவர் ஆற்றிய பல ஆண்டுகாலப் பணியின் அடிப்படையில், நமது அரசியலமைப்புச் சட்டம் குறித்த அளப்பரிய அறிவைப் பெற்றவர் அவர்., மாநிலங்களவையின் உற்பத்தித்திறனை அதிகரிக்க அவர் பாராட்டத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நாடாளுமன்றம்தான் எல்லாத்துக்கும் மேலே.. மீண்டும் உறுதியாக பேசும் துணை ஜனாதிபதி.!

சமூகத்திற்கு சேவை செய்வதில் அவருக்கு உள்ள ஆர்வம் மகத்தானது என்றும் அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழட்டும் எனவும் பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு அதிர்ச்சி..! துணைவேந்தர்கள் மாநாட்டில் ஜெகதீப் தன்கர் பங்கேற்பு.. ராஜ்பவன் அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share