‘சமத்துவம்’ சொன்ன ஸ்டாலின், ‘ஒற்றுமையை’ வலியுறுத்திய மோடி, ‘நலமும், வளமும்’ கேட்ட விஜய்... மலையாள மக்களுக்கு ஓணம் வாழ்த்துகள்...!
இந்த நல்ல நாளில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரைப்பிரபலங்களும் மலையாள மொழி பேசும் மக்களுக்கு தங்களது ஓணம் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஓணம் என்பது ஒரு நாள் மட்டும் கொண்டாடப்படக்கூடிய பண்டிகை அல்ல. அத்தம் தொடங்கி திருவோணம் வரை 10 நாட்களும் திருவோணம் கேரளாவில் கலைகட்டும்.
மலையாள மக்கள் ஆண்டுதோறும் மன்னர் மாவேளியை வரவேற்கும் விதமாகவும், மன்னர் வந்து தங்களை பார்க்க வருவார் என்ற நம்பிக்கையிலே இந்த பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
இந்த 10 நாட்களும் மக்கள் தங்கள் வீடுகள் வீடுகளில் வாயில்களில் பூக்கோலமிட்டு கொண்ட இந்த ஓனம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஓணம் திருநாளில் கேரளம் முழுவதும், புத்தாடைகள், விளையாட்டுப் போட்டிகள், பலகாரங்கள் என கொண்டாட்டம் களைக்கட்டும். கேரளம் மட்டுமின்றி தென்தமிழக மாவட்டங்களிலும் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்த நல்ல நாளில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரைப்பிரபலங்களும் மலையாள மொழி பேசும் மக்களுக்கு தங்களது ஓணம் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பாரத பிரதமர் மோடி தனது சோசியல் மீடியாவில், “அனைவருக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துகள். இது உலகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் ஒரு துடிப்பான பண்டிகை. இந்த பண்டிகை மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் செழிப்பு ஆகிய உணர்வுகளை மேலும் வலுப்படுத்தட்டும்” எனக்கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஓணம் வந்தல்லோ!! விமான டிக்கெட் விர்ர்ர்ர்!! ரெயில், பஸ் Full! பயணிகளுக்கு அதிர்ச்சி!
ஓணம் திருநாளையொட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “மண்ணும் மக்களும் ஒன்றாக வாழ்ந்த ஒரு காலத்தின் நினைவைப் புதுப்பிப்பதே ஓணம். பிறப்பால் எவரும் உயர்ந்தவரும் அல்லர், தாழ்ந்தவரும் அல்லர். எல்லார்க்கும் எல்லாம் என்பதே நம் இலக்காகட்டும். மாவேலியை வீழ்த்தப்பட்டவராக அல்லாமல், மக்களின் உள்ளங்களில் வாழும், வளமும் மகிழ்ச்சியும் நிறைந்த மன்னனாகக் கொண்டாடுவோம்மாவேலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும். அனைவருக்கும் உளம் நிறைந்த ஓணம் வாழ்த்துகள்! இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்து செய்தியில், “உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்! கேரளம் மாநிலத்தின் அறுவடைத் திருநாளாம் ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்! அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும்! அன்பைப் பரிமாறி, மகிழ்ச்சியைக் கொண்டாடி, ஒற்றுமையைப் போற்றும் இத்திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்!" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "ஸ்டாலின்தான் BEST CM"..! காக்ரோச் ஜனதா கட்சி தலைவர் அபிஜித் புகழாரம்.!! அரசியலில் சலசலப்பு..!!