×
 

நெருக்கடி..!! சிலிண்டர் தட்டுப்பாடு... ஓட்டல்கள் சங்கம் பிரதமர், தமிழக முதல்வருக்கு கடிதம்..!!

சிலிண்டர் வினியோகம் குறித்து பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஓட்டல் சங்கங்கள் கடிதம் எழுதி உள்ளன.

இந்தியாவில் GAS சிலிண்டர் தட்டுப்பாடு என்ற பிரச்சினை மீண்டும் தலைதூக்கியுள்ளது. இது உலக அளவிலான புவிசார் அரசியல் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள ஒரு பெரிய தாக்கம். முக்கிய காரணம் மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழல். ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால், உலகின் மிக முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து பாதை தடைபட்டுள்ளது.

வீட்டு உபயோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, வணிக உபயோக சிலிண்டர்களின் விநியோகம் பல இடங்களில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பெங்களூரு, சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் ஹோட்டல்கள், உணவகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பல உணவகங்கள் தற்காலிகமாக மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

வீட்டு உபயோக சிலிண்டர்களைப் பொறுத்தவரை, மத்திய அரசு பதுக்கலைத் தடுக்கும் வகையில் முன்பதிவு விதிகளை கடுமையாக்கியுள்ளது. முன்பு 21 நாட்கள் இடைவெளியில் அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்யலாம் என்றிருந்த நிலையில், தற்போது 25 நாட்கள் கட்டாய இடைவெளி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓட்டல் சங்கங்கள் கடிதம் எழுதி உள்ளன. வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் வினியோகம் ரத்து செய்யப்பட்டதால் பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஹோட்டல்கள் சங்கம் கடிதம் எழுதி உள்ளது.

இதையும் படிங்க: அப்படிலாம் இல்ல... பிரதமருக்கு தமிழ் மீது நிறைய பற்று... வரிந்து கட்டிய EPS..!!

வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டதை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் உணவகங்கள் செயல்பட முடியாத நிலைமைக்கு சென்று விட்டதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளனர். சிலிண்டர் வினியோகம் நிறுத்தத்தால் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு உணவு விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தங்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிங்க: “மனம் கவர்ந்த தலைவர்; தலை சிறந்த நிர்வாகி”... ஜெயலலிதாவிற்கு புகழாரம் சூட்டிய மோடி, அமித் ஷா...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share