×
 

ஆப்ரிக்காவின் முதல் G20 உச்சி மாநாடு! பிரதமர் மோடி முன்மொழிந்த முன்னெடுப்புகள்!!

உலகளாவிய மருத்துவ குழு, போதைப்பொருள், பயங்கரவாத எதிர்ப்பு குழுவை அமைத்து, இதற்கான சட்ட விரோத பணபரிமாற்றத்தை தடுக்க வேண்டும் என ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில் தெரிவித்தார்.

தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்திய வம்சாவளியினரின் உற்சாக வரவேற்புக்கு மகிழ்ச்சி அடைந்த மோடி, உலகத் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

ஆப்பிரிக்காவில் முதல் முறையாக நடைபெறும் இந்த மாநாட்டில், நிலையான வளர்ச்சி, சுகாதார அவசரநிலைகள், போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதம் போன்ற உலகப் பிரச்சினைகளைப் பற்றி மோடி விவாதித்தார்.

முதல் அமர்வில் உரையாற்றிய மோடி, “ஆப்பிரிக்கா ஜி20 உச்சி மாநாட்டை முதல் முறையாக நடத்துவதால், நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்கு இது சரியான தருணம். சுகாதார அவசரநிலைகள் மற்றும் இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்ளும்போது நாம் ஒன்றாகச் செயல்படும்போது வலுவாக இருக்கிறோம்” என்று கூறினார். அவர் மூன்று முக்கிய முயற்சிகளை முன்மொழிந்தார்: உலகளாவிய மருத்துவ குழு, போதைப்பொருள்-பயங்கரவாத எதிர்ப்பு குழு, மற்றும் சட்டவிரோத பணபரிமாற்றத்தைத் தடுக்கும் திட்டம்.

இதையும் படிங்க: மோடி ப்ரசண்ட்! ட்ரம்ப் ஆப்சென்ட்!! தென்னாப்ரிக்கா ஜி 20 உச்சிமாநாடு! சூடுபிடிக்கும் சர்வதேச அரசியல்!

மோடி மேலும், “எந்த அவசரநிலையிலும் விரைவாக உதவி செய்ய தயாராக இருக்கும் ஜி20 நாடுகளின் பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்கள் குழுவை உருவாக்க வேண்டும். போதைப்பொருள் கடத்தல், குறிப்பாக ஃபென்டானில் போன்ற ஆபத்தான பொருட்களின் பரவலுக்கு எதிராக ஜி20 போதை-பயங்கரவாத எதிர்ப்பு முயற்சியை தொடங்க வேண்டும். இதன் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தைத் தடுத்து, போதை-பயங்கரவாத பொருளாதாரத்தை அழிக்கலாம்” என்று வலியுறுத்தினார்.

ஜோகன்னஸ்பர்க் நகரத்தில் இந்திய வம்சாவளியினரின் கலாசார வரவேற்பும் குறிப்பிடத்தக்கது. கணபதி பிரார்த்தனை, சாந்தி மந்திரம், தெய்வீக பாடல்கள் உட்பட உற்சாக நிகழ்ச்சிகளில் மோடி களித்தார். அந்நாட்டு அதிபர் சிரில் ராமபோசா மோடியை அழைத்து வரவேற்றார். இந்த மாநாடு, “ஒற்றுமை, சமத்துவம், நிலையான வளர்ச்சி” என்ற தொனியில் நடைபெறுகிறது.

கடந்த ஆண்டுகளில் 2022இல் இந்தோனேசியாவில், 2023இல் இந்தியாவில், 2024இல் பிரேசிலில் ஜி20 உச்சி மாநாடுகள் நடந்தன. இந்தியாவின் இந்த முயற்சிகள் உலகளாவிய சவால்களுக்கு தீர்வு காண உதவும் என்று மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிங்க: என்ன பொய் சொன்னாலும் நடக்காது!! ஜி20 உச்சி மாநாடு!! அமெரிக்கா கறார் பதில்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share