×
 

யார் முதல் பெண் அமைச்சர்..? Instagram, வாட்ஸ் அப்பை நம்பாதீங்க..! MP கனிமொழி அறிவுறுத்தல்..!

முதல் பெண் அமைச்சர் யார் என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உரையாற்றினார்.

தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிமுகத்தை வழங்கியது. நடிகர் விஜய் தலைமையிலான இந்தக் கட்சி, தனித்துப் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஒற்றைப் பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்தது. திராவிடக் கட்சிகளின் நீண்டகால இருமுனை ஆதிக்கத்தை உடைத்த இந்த வெற்றி, தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.

ஆனால், இந்த வெற்றிக்கு பின்னால் உள்ள முக்கிய காரணமாக சமூக ஊடகங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்ற தளங்களைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்த விமர்சனத்தின் மையப்புள்ளி, தவெகவின் வெற்றி 'ரியல்' அரசியல் உழைப்பின் விளைவல்ல, மாறாக டிஜிட்டல் உள்ளடக்கங்கள், ரீல்ஸ், மீம்கள் மற்றும் இளைஞர்களை ஈர்க்கும் சினிமா ஸ்டைல் பிரசாரத்தின் பலன்தான் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவை மாவட்டம் மாதம்பட்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், Whatsapp யூனிவர்சிட்டிகள் மூலம் சிந்தனைப் போக்குகளை மாற்றி அமைக்கின்றனர் என்று தெரிவித்தார். சுதந்திரத்திற்கு முன்பாகவே தமிழகத்தில் பெண் அமைச்சர்கள் இருந்துள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சட்டசபை தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன? விசாரணையை முடுக்கி விட்ட ஸ்டாலின்!! திமுக தீவிரம்!

திமுகவின் அனைத்து ஆட்சியிலும் பெண் அமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள் என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார். தற்போது தான் தமிழகத்தில் முதல்முறையாக பெண் அமைச்சர் என்று தவறான செய்திகள் பரப்பப்படுகிறது எனவும் கூறினார். இது அரசியலுக்காக கூறப்படும் கருத்து இல்லை என்றும் அரசியலை தாண்டி பல விஷயங்கள் பரப்பப்படுகிறது என்றும் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப்பை நம்பாதீர்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: இனி எப்படி களமாடனும்..? மே 23இல் திமுக இளைஞரணி கூட்டம்..! முக்கிய விவாதம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share