‘யாரா இருந்தாலும் மன்னிசிட்டு போய்கிட்டே இருங்க’: எல்லாத்துக்கு கவலைப்படாதிங்க! வாழ்க்கை தத்துவத்தை விளக்கிய ‘தல’ தோனி
“ஒருவர் எவ்வளவு தவறு செய்தாலும், எவ்வளவு கடினமாக நடந்த கொண்டாலும் மன்னித்துவிட்டு நகர்ந்துவிடுங்கள், இந்த மன்னப்பை எல்லோராலும் வழங்கவிட முடியாது” என்று வாழ்க்கைக்கான தத்துவத்தை மிக எளிமையாக சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்தார்.
இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக இருந்த எம்எஸ் தோனி தன்னுடைய “தோனி” எனும் செயலி அறிமுக விழா மும்பையில் இன்று நடந்தது. இதில் எம்எஸ் தோனி, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்ஸன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று எம்எஸ் தோனி ரசிகர்கள் மத்தியில் பேசியதாவது, வாழ்க்கை மிகவும் எளிமையானது என நான் நினைக்கிறேன். உங்களுக்காக நேர்மையாக இருங்கள், உங்களுக்காக ஒருவர் என்ன செய்தாலும், அவருக்காக சிறிதளவேனும் நன்றியுணர்வோடு இருங்கள். இதுதான் என் தலைவிதி, என்று எப்போதும் பேச வேண்டாம். மூத்தோர்களை மதிப்போம், இளையவர்கள் மீது அன்புடன் இருப்போம்.
எப்போதுமே முகத்தில் புன்னகையுடன் இருந்தாலே பாதிப்பிரச்சினையை நாம் சரி செய்து விடலாம் என்று நான் நம்புகிறேன். நீங்கள் நிம்மதியாக சூழலில் இல்லாவிட்டால்கூட, கடினமான செயல்களை உங்களுக்கு யாரேனும் செய்தால்கூட அவர்களை மன்னிக்கும் சக்தி உங்களிடம் இருக்கிறது. இந்த மன்னிக்கும் சக்தி நம்மில் பலருக்கும் இல்லை. இதுநாள் வரை நான் என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் எந்த தனிப்பட்ட வீரர் குறித்தும் தவறாகப் பேசியதுஇல்லை, விமர்சித்ததும் இல்லை. என்னை காயப்படுத்தி சிலர் பேசியபோதும்கூட அதற்கு பதில் அளித்து நான் பேசியதும் இல்லை.
இதையும் படிங்க: சீரியஸ் ரேப்பிஸ்ட் கைது..! சிறுமிகளை மட்டும் குறிவைத்து சிதைக்கும் சைக்கோ..!
அவ்வாறு நாமும் பதிலுக்கு பதில் செய்தால் நாம் பழிவாங்கும் மக்களாக மாறிவிடுவோம். அவ்வளவுதான் தவறு செய்தவர்களை மன்னித்துவிட்டு, அந்த இடத்திலிருந்து நகர்ந்துவிட வேண்டும். வாழ்க்கையில் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும். ஏனென்றால் நாம் என்ன செய்தாலும், எப்படி வளர்ந்தாலும், நாம் வாழ்க்கையில் கேட்பது, விரும்புவது மகிழ்ச்சி மட்டும்தான். நாம் இன்றைய சூழலில் ஒரு அழுத்தத்தை உணர்கிறோம். இக்கரைக்கு அக்கரை பச்சை என்று வருந்துகிறோம். நம்முடைய வாழ்க்கையைவிட்டு, மற்றவரின் வாழ்க்கையை உற்றுப்பார்த்து அவர்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கிறது, சிறப்பாக வாழ்கிறார் என்று ஒப்பீடு கொள்கிறோம். ஆனால், எது முக்கியமானது என்றால், எவ்வாறு அழுதத்தை சமாளிக்கிறோம், அழுத்தத்தை எதிர்கொள்ள எவ்வாறு தயாராகிறோம் என்பதில்தான் இருக்கிறது.
நாம் வளர்ந்து வரும் காலத்தில், கவனக்குறைவாக இருக்க முடியாது என்று எங்களுக்கு அறிவுரை சொல்லப்பட்டது. ஆனால் இன்றைய சூழலில், நம்மைச் சுற்றி நடக்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் நாம் கவலைப்பட முடியாது என்பதால், கொஞ்சம் கவனக்குறைவாக இருப்பது முக்கியம் என்று நான் உணர்கிறேன். நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை நாம் ஏதும் செய்ய முடியாது. தன்னுடைய கருத்துக்கள் மீது தீராவெறி கொண்டவர்கள் ஆக்கபூர்வமானவர்கள் அல்ல. ஒவ்வொரு கருத்தும் ஒரு பதிலுக்கோ அல்லது பரிசீலனைக்குகூட தகுதியானது அல்ல என்பதை உணர வேண்டும்.
மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள், என்ன உணர்கிறார்கள் என்பதைப் பார்த்து நீங்கள் செயல்பட்டால், நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயத்துக்கு நீங்கள் அதற்கு அதிக கவனம் செலுத்தாமல் போகநேரிடும். நான் என் வாழ்க்கையில் சற்று கவனக்குறைவாகவே இருக்கிறேன். 100 சதவீதம் அனைத்துக்கும் நான் கவனம் செலுத்துவதில்லை. ஏனென்றால் சில விஷயங்களை இது முக்கியம் இது முக்கியமல்ல என்று நான் உணர்கிறேன். மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று நான் கவனித்தாலும்கூட, அதைப் பற்றி என்னால் எதுவும் செய்ய முடியாது, அதற்கு அரை மணி நேரம் ஒதுக்கி என்ன பயன். இதுக்காக நான் என் அரைமணிநேர தூக்கத்தைக்கூட கைவிடமாட்டேன்
இவ்வாறு தோனி தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் தரமில்லாத ஒரே அரசியல்வாதி உதயநிதிதான்... உக்கிரமான அண்ணாமலை ..!