×
 

பெருந்துயரம்...!! - சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த கட்டிடம்... இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உடல் நசுங்கி பலி...!

இரவு சுமார் 8.30 மணியளவில், கட்டிடத்தின் ஒரு பகுதி பெரும் சத்தத்துடன் திடீரென இடிந்து விழுந்ததால், உள்ளூர் மக்களிடையே பீதி ஏற்பட்டது.

மும்பை மாநகரத்தை கனமழை புரட்டிப்போட்டு வருகிறது. இடைவிடாத மழையின் காரணமாக நகரமே வெள்ளத்தில் சிக்கித் தவித்து வரும் நிலையில், மற்றொரு துயர சம்பவமும் அரங்கேறியுள்ளது. சனிக்கிழமை இரவு மும்பையின் மங்கூர்த் மற்றும் ஜனதா நகர் பகுதிகளில் மூன்று மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இரவு சுமார் 8.30 மணியளவில், கட்டிடத்தின் ஒரு பகுதி பெரும் சத்தத்துடன் திடீரென இடிந்து விழுந்ததால், உள்ளூர் மக்களிடையே பீதி ஏற்பட்டது.

இருப்பினும், இந்த விபத்து அருகிலுள்ள இரண்டு அல்லது மூன்று வீடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. கட்டிடத்தின் இடிபாடுகள் அண்டை வீடுகளின் மீது விழுந்து, அவற்றை முற்றிலுமாக சேதப்படுத்தின. இந்த எதிர்பாராத துயரச் சம்பவத்தில், நான்கு பெண்கள் உட்பட குறைந்தது ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். காயமடைந்தவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், விபத்து நடந்த உடனேயே உள்ளூர் மக்கள் காவல்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழுக்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும், மீட்புப் பணியாளர்களும் தீயணைப்புப் படையினரும் போர்க்கால அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்க இரவு நேரத்திலும் மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இடிபாடுகள் அகற்றப்பட்டு, உடல்கள் வெளியே எடுக்கப்பட்டன. மீட்புப் பணிகள் தற்போது முடிவடைந்த போதிலும், அப்பகுதி துயரத்தின் நிழலில் மூழ்கியுள்ளது.

இதையும் படிங்க: பெருமழை பாதிப்பில் மும்பை: 5 பேர் பலி; கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!!

மும்பையில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக் காலத்தில் இதுபோன்ற பழைய கட்டிடங்கள் இடிந்து விழுவது சாதாரணமாகி வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த போதிலும், ஏழைகள் வசிக்கும் கட்டிடங்கள் மற்றும் பழைய கட்டமைப்புகளில் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாததாலேயே இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதாக உள்ளூர் மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். கனமழையை முன்னிட்டு, மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும், பலவீனமான கட்டமைப்புகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

BREAKING News: Mumbai

Six people were killed and one injured after two to three shanties in a ground-plus-three (G+3) structure collapsed in Mankhurd area, according to BMC.

Rescue operations are underway.

Heartfelt condolences to the families affected.#Mumbai #Mumbairain pic.twitter.com/yAccULljqw

— Siraj Noorani (@sirajnoorani) July 5, 2026

இதையும் படிங்க: பெருமழை பாதிப்பில் மும்பை: 5 பேர் பலி; கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share