×
 
☰

நாகர்கோவில் யூடியூபர் வீட்டில் 120 பவுன் தங்கம் அபேஸ்! பீரோவை உடைத்து தூக்கிய மர்ம கும்பல்! போலீஸ் விசாரணை!

ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு இளஞ்செழியனும் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே பிரபல பெண் யூடியூபர் வீட்டின் பீரோவை உடைத்து 120 பவுன் தங்க நகைகள், வைர நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்களை பிடிக்க போலீசார் 2 தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

நாகர்கோவில் அருகே தம்பத்துக்கோணம் வி.ஐ.பி. கார்டன் பகுதியில் வசித்து வருபவர் தொழிலதிபர் வினோத்குமார், 30. இவரது மனைவி மதுமிதா பிரபல யூடியூபராக இருந்து வருகிறார். இவர்கள் குடும்பத்துடன் நேற்று மதியம் நெல்லைக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நள்ளிரவு 12 மணியளவில் வீட்டுக்கு திரும்பினர்.

வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றபோது, பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்ததை கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது, அங்கிருந்த கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அறைக்குள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைத்திருந்த 120 பவுன் தங்க நகைகள், வைர நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: சிறையில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் கைவரிசை? தாம்பரத்தில் சிக்கிய பழைய கொள்ளையன்! விசாரணையில் பகீர்!

இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு இளஞ்செழியனும் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

முதற்கட்ட விசாரணையில், வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையடித்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகியிருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாயும் வரவழைக்கப்பட்ட நிலையில், சிறிது தூரம் சென்ற நாய் பின்னர் திரும்பியது.

வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், குடும்பத்தினர் வீட்டில் இல்லாத நேரத்தை தெரிந்த நபர்கள் யாரேனும் இந்த கொள்ளையில் ஈடுபட்டார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதால், சி.சி.டி.வி. மற்றும் தடயங்களின் அடிப்படையில் கொள்ளையர்களை விரைவில் அடையாளம் காண போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: #BREAKING கட்டிங் மெஷினால் வெட்டப்பட்ட பூட்டு... பிரபல யு-டியூப்பர் வீட்டில் 118 சவரன் நகைகள் கொள்ளை... பட்டப்பகலில் துணிகரம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share