அமித் ஷா அவசர அழைப்பு.. பரபரக்கும் பாஜக! டெல்லிக்கு விரைகிறார் நயினார்..!
அமித் ஷாவின் அழைப்பை ஏற்று தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு செல்கிறார்.
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பாஜக தீவிரமாகத் தயாராகி வருகிறது. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தவும், தொண்டர்களை ஒருங்கிணைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டு அரசியலில் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தி வருகிறார், குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பாஜகவை தயார்படுத்துவதற்காக பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு டெல்லி தேசிய தலைமையில் இருந்து அழைப்பு வந்ததன் காரணமாக கோவையில் இருந்து டெல்லிக்கு புறப்படுகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நயினார் நாகேந்திரன் மாநில நிர்வாகிகள் பட்டியலை பாஜக தலைமைக்கு அனுப்பி இருந்தார். அந்தப் பட்டியலில் சில முரண்கள் இருப்பதால் நயினார் நாகேந்திரனை உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: உங்க அம்மா, பொண்டாட்டிய பத்தி பேசுனா இப்படிதான் பிண்டம் மாதிரி இருப்பீங்களா? ஆர்.எஸ் பாரதி கடும் சாடல்...
மாநில நிர்வாகிகள் நியமனத்தை விரைந்து முடித்துவிட்டு தேர்தலில் கவனம் செலுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் நேரம் என்பதால் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக நிர்வாகிகள் பட்டியலில் சில மாற்றங்கள் கொண்டு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நாங்க சொல்றத கேட்டு தான் ஆகணும்! எச். ராஜாவுக்கு நீதிமன்றம் தடாலடி உத்தரவு..!