இரக்கமற்ற முதல்வர்! அந்த சார் கொடுத்த தைரியமா? பாலியல் வன்முறை குறித்து நயினார் விளாசல்...!
கோவை சம்பவம் போல் மீண்டும் ஒரு சம்பவம் நிகழாது என முதல்வர் ஸ்டாலின் உத்தரவாதம் கொடுக்க முடியுமா என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, இரக்கமற்ற முதலமைச்சர் இப்போதாவது பதிலளிப்பாரா என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் சுட்டுக் கைது செய்துள்ள சம்பவத்தை சுட்டி காட்டினார்.
ஆனால், ஒரு பெரிய நகரத்தில் உள்ள ஒரு சர்வதேச விமான நிலையம் அருகே ஒரு பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தூக்கி எறிய இந்த குற்றவாளிகளுக்கு எப்படி துணிச்சல் வந்தது என கேள்வி எழுப்பினார். முழு நாட்டையும் உலுக்கிய ஒரு வழக்கில், ஒளிந்து கொண்டு தப்பிக்க முடியும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் எப்படி நம்பினார்கள் என்று கேட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரைப் பாதுகாக்க வந்த சார் கொடுத்த தைரியமா என்றும் சாடினார்.
குற்றம் நடந்த இடத்திற்கு அருகில் இயங்கி வந்த சட்டவிரோத மதுபானக் கடை இந்த கொடூரமான செயலுக்கு வழிவகுத்தது என்று தெரிவித்தார். இவ்வளவு நாட்களாக அந்தக் கடை மீது இந்த அரசு ஏன் நடவடிக்கை எடுக்கத் தவறியது என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: இது பாலியல் மாடல் ஆட்சி… வாயை திறங்க ஸ்டாலின்..! வாட்டி எடுத்த நயினார் நாகேந்திரன்…!
திமுக அரசாங்கத்தின் திறமையற்ற நிர்வாகத்தால், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்றும் குற்றங்கள் அதிகரித்துவிட்டன, இப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களை சுட்டுக் கொன்று பிடிப்பதால் என்ன பயன் என்று கேட்டுள்ளார். மக்களின் மனதில் உள்ள பயத்தை நீக்க முடியுமா அல்லது இதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் ஒருபோதும் நடக்காது என்று முதலமைச்சரால் குறைந்தபட்சம் உத்தரவாதம் அளிக்க முடியுமா என்று சரமாரியாக சாடினார்.
இதையும் படிங்க: வேட்டையாடப்படும் பெண்கள்! கம்பி சுற்றும் முதல்வர்... இதான் நல்லாட்சி லட்சணமா? நயினார் சாடல்...!