×
 

என்ன முதல்வரே இதெல்லாம்..? திருச்செந்தூர் கோவில் சேவை கட்டணம் உயர்வு..? நயினார் கண்டனம்..!!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் சேவை கட்டின உயர்வு தொடர்பான தகவலுக்கு நவீன கண்டனம் தெரிவித்து உள்ளார்.

திருச்செந்தூர் கோவில் சேவை கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகி இருப்பதாகவும் கடுமையான கண்டனத்தை பதிவு செய்வதாகவும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். தமிழக மக்கள் கோவில்களை நெருங்கவிடாமல் ஜோசப் விஜய் அரசு தடுக்க திட்டமிடுவது நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சேவைக் கட்டணங்களை விஜய் அரசு உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிப்பதோடு, கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார். சண்முகார்ச்சனை, ஒன்பது கால பூஜை, அபிஷேக தரிசனக் கட்டணம் என அனைத்து சேவைகளுக்கான கட்டணத்தையும் மூன்று மடங்கு வரை உயர்த்தும் இத்திட்டம் கோவில் வருவாயைப் பெருக்கவா? அல்லது ஏழை எளிய நடுத்தர மக்களை சுப்பிரமணிய சுவாமிக்கு சேவை செய்ய விடாமல் தடுப்பதற்கா? என்று கேள்வி எழுப்பினார்.

"கோவில் சொத்துக்கள் கோவிலுக்கே பயன்படுத்தப்படும்" என்று ஆளுநர் உரையில் முழங்கிவிட்டு, இன்று அடித்தட்டு மக்களை கோவில் பக்கமே நெருங்கவிடாதபடி கட்டணத்தை உயர்த்தத் திட்டமிடுவது தான் தூய சக்தியின் உண்மை முகமா? என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: "அரசியல் ஸ்டாண்ட் வேணாம்யா"..! அமைச்சர் நிர்மல் குமாரை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!

"அனைவருக்குமான அரசு இது" என்று முதல்வர் விஜய் கூறுவது உண்மையாக இருந்தால், கோவில்களில் நிலவும் இதுபோன்ற தரிசன மற்றும் சேவைக் கட்டணமுறையை முதலில் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். கோவில் வருவாயைப் பெருக்கும் நோக்கில் பக்த கோடிகள் மீது நிதிச் சுமையை ஏற்றாமல், மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். 

இதையும் படிங்க: முதல்வர் சீட் தான் மாறி இருக்கு..! இந்து விரோத ஆட்சி... தவெகவை வறுத்தெடுத்த நயினார்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share