கேடுகெட்ட ஆட்சி... காட்டாட்சி..! கடிவாளம் போடுவோம் முதல்வரே... நயினார் உறுதி...!
திமுகவின் காட்டாட்சிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி கூடிய விரைவில் கடிவாளமிடும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் காதலை ஏற்காமல் பேச மறுத்த நிலையில் பள்ளிக்கு சென்ற 12 ஆம் வகுப்பு மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். காதலிக்க மறுத்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்தி கொன்ற முனிராஜ் என்பவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசுப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்த நிலையில் கத்தியால் குத்தி கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.
இந்த நிலையில், பெண்களுக்கெதிரான திமுக ஆட்சி விரைவில் ஒழிய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த 12-ஆம் வகுப்பு மாணவியைப் பள்ளி செல்லும் வழியில் மறித்து இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிப்பதோடு, மிகுந்த மன வேதனையுமளிக்கிறது என்று கூறியுள்ளார். கொலையான மாணவியின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த மீளாத் துயரைக் கடந்து வர இறைவன் அவர்களுக்குத் துணைநிற்க வேண்டுமெனப் பிரார்த்தித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாள் விடியும் பொழுதும் இன்று எந்தப் பெண்ணுக்கு எங்கே வன்கொடுமை நடந்துள்ளதோ என்ற பதற்றத்திலேயே செய்தித்தாள்களைப் பிரிக்க வேண்டியிருக்கிறது எனவும் இத்தனை ஆயிரம் காவல்துறையினர் இருந்தும் கூட நமது வீட்டுப் பிள்ளைகளை நாம் பொத்திப் பொத்திப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது எனவும் கைதுகள் தான் அதிகரிக்கிறதே தவிர திமுக ஆட்சியில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை என்றும் கூறினார்.
இதையும் படிங்க: இது போதும்யா... முதல்வரிடம் கண்கலங்கி நின்ற திமுக ஒன்றிய செயலாளர்...!
கடந்த நான்கரை ஆண்டுகளாகப் பெண்களின் பாதுகாப்பைப் பலப்படுத்தக் கூறி பாஜக பல போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது, கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது என்று கூறிய நயினார் நாகேந்திரன், ஆனால், தன் வாரிசுகளை மட்டுமே உயர்ந்ததாக நினைக்கும் முதல்வர் ஸ்டாலின் நம் பிள்ளைகளைத் தொடர்ந்து பலிகொடுக்கத் தயாராகிவிட்டார் என்றும் இப்படிப்பட்ட ஒரு கேடுகெட்ட ஆட்சி இனியும் தமிழகத்தில் தொடரக்கூடாது என தெரிவித்தார். திமுகவின் இந்த காட்டாட்சிக்கு நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி கூடிய விரைவில் கடிவாளமிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பட்டப் பகலில் மாணவி கொலை... ஒவ்வொரு நிமிஷமும் திக் திக்குனு இருக்கு... EPS ஆவேசம்..!