×
 

அவரு அப்படி பேசுற ஆளு இல்லங்க..! இருந்தாலும்... நயினாருக்கு அறிவுரை சொன்ன TTV தினகரன்..!

நயினார் நாகேந்திரன் பொதுவாக அப்படி பேசும் ஆள் இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

அரசியலில் தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்ப்பதே நாகரிகமான அரசியலாக இருக்கும் என்று நயினார் நாகேந்திரனின் விஜய் குறித்த விமர்சனத்திற்கு டி வி தினகரன் பதில் வழங்கினார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசியபோது நடிகர் விஜய்யை விமர்சிக்கும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.

விஜய் சேலத்தில் நடத்திய கூட்டத்தில் அரசியல் கட்சிகள் குறித்து பேசியதற்கு பதிலடியாக, நயினார் நாகேந்திரன் பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷா கிட்ட இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடக்க முடியும் என்று கூறினார். இந்த கருத்து நடிகை திரிஷாவின் பெயரை தனிப்பட்ட வாழ்க்கை சூழலுடன் இணைத்து, அவதூறாகவும் அநாகரிகமாகவும் பார்க்கப்பட்டது.

இந்த பேச்சு உடனடியாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் இதை அரசியல் விமர்சனத்தின் எல்லையை மீறிய செயலாக கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், அரசியலில் தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என நயினார் நாகேந்திரனுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவுரை வழங்கினார்.

இதையும் படிங்க: நயினார் எல்லாம் ஒரு ஆளா? பாஜக- லாம் ஒரு கட்சியா? விஜய் பற்றிய விமர்சனத்திற்கு செங்கோட்டையின் பதிலடி..!

விஜய் குறித்து அநாகரிகமாக நயினார் விமர்சித்திருந்த நிலையில் டிடிவி தினகரன் இவ்வாறு தெரிவித்தார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பொதுவாக அப்படி விமர்சிக்கும் நபர் அல்ல என்று தெரிவித்துள்ளார். தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்ப்பதே நாகரிகமான அரசியலாக இருக்கும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: திரிஷா பற்றி நைனாரின் அநாகரிக விமர்சனம்... அடிப்படை அறிவை இழந்துவிட்டார்.. நாஞ்சில் சம்பத் கண்டனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share