மீண்டும் அதிர்ச்சி... தீப்பற்றி எரிந்த தனியார் பேருந்து... 29 பயணிகளின் நிலை என்ன?
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அடுத்தடுத்து ஆம்னி பேருந்துகள் தீப்பற்றி எரிந்ததில் பலர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சி ஏற்படுத்தி வந்தது.
தெலங்கானாவில் மற்றொரு தனியார் பயணப் பேருந்து தீப்பிடித்தது. டிரைவர் எச்சரிக்கையால் 29 பயணிகள் ஜன்னல் கண்ணாடியை உடைத்து தப்பினர்.
ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டம் விஜயவாடா - ஐதராபாத் நெடுஞ்சாலையில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தின் சித்யாலா மண்டலத்தின் வேலிமினேடு என்ற இடத்தில் 'விஹாரி' தனியார் பயணப் பேருந்தில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.
விஹாரி டிராவல்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஏசி ஸ்லீப்பர் கோச் பேருந்து ஐதராபாத்தில் இருந்து ஆந்திராவின் கந்துகுருவுக்குச் இன்றுசென்று கொண்டிருந்தது. பேருந்தில் 29 பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து ஐதராபாத்-விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள வேலிமினேடு கிராமத்திற்கு அருகே திடீரென தீப்பற்றியது விபத்து ஏற்பட்டது.
இதையும் படிங்க: பகீர் காட்சிகள்...!! காலையிலேயே பயங்கரம்... வெடித்துச் சிதறிய சிலிண்டர்கள் ...!
பேருந்தில் இருந்து புகை வருவதைப் பார்த்து, உஷாரான ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி பயணிகளை கீழே இறங்கும்படி எச்சரித்தார். பேருந்தின் முன்பக்கத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், பயணிகள் பின்புறத்தில் உள்ள அவசர வழியிலிருந்து வெளியே வந்தனர். சில நிமிடங்களில், தீ முழு பேருந்தும் முழுவதும் பற்றி எரிந்தது. மறுபுறம், விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து விவரங்களை சேகரித்தனர். இருப்பினும், இந்த விபத்தில் பயணிகள் காயமின்றி தப்பியதால் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
விபத்துக்குள்ளான பேருந்து நாகாலாந்தில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் இன்னும் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சமீபத்தில் கர்னூலில் வி. காவேரி பேருந்து தீப்பிடித்து 19 பேர் உயிருடன் எரிந்தனர். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த சம்பவத்தில் பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட புதிய செல்போன்கள் அடங்கிய பார்சல் காரணமாக தீப்பிடித்த சில நொடிகளிலேயே வெடிகுண்டை போன்று செயல்பட்டு சில விநாடிகளில் பேருந்து முழுவதும் அதிக வெப்பத்துடன் இறந்ததால் பலர் உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்தது.
அதேபோல் கடந்த அக்டோபர் மாதம் ராஜஸ்தானில் புத்தம் புதிய ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து 21 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இப்படி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அடுத்தடுத்து ஆம்னி பேருந்துகள் தீப்பற்றி எரிந்ததில் பலர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சி ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் தெலங்கானாவில் ஏற்பட்ட விபத்தில் ஓட்டுனரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இதையும் படிங்க: தெலங்கானா: நேருக்கு நேர் மோதிக்கொண்ட அரசு பேருந்து-லாரி..!! பரிதாபமாக பறிபோன 17 உயிர்கள்..!!