#BREAKING: பேரதிர்ச்சி..! நீட் தேர்வு ரத்து... தேர்வு முகமை அதிரடி அறிவிப்பு!
வினாத்தாள் கசிவு காரணமாக நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் என்பது National Eligibility cum Entrance Test என்று அழைக்கப்படும் இந்தியாவின் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும். இது மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவ அமைப்புகளின் MBBS, BDS, BAMS, BHMS, BUMS உள்ளிட்ட இளநிலை படிப்புகளுக்கு அனுமதி பெறுவதற்கான ஒரே தகுதித் தேர்வு ஆகும். தேசிய தேர்வு முகமை இந்தத் தேர்வை நடத்துகிறது. இதற்கு முன்பு AIPMT என்று அழைக்கப்பட்ட இந்தத் தேர்வு, 2013 முதல் NEET எனப் பெயர் மாற்றம் பெற்று, 2019 முதல் NTA மூலம் முழுமையாக நடத்தப்படுகிறது.
இந்தியா முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் MBBS உள்ளிட்ட படிப்புகளுக்கு அனுமதி பெற இந்தத் தேர்வு கட்டாயமாகும்.நீட் தேர்வு ஒரு ஒற்றை நாளில், ஒரே நேரத்தில் நாடு முழுவதும் நடைபெறும் OMR முறையிலான தேர்வு ஆகும். இது 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தமிழில் தேர்வு எழுதும் வசதியும் உள்ளது. இந்தத் தேர்வின் முக்கிய நோக்கம், மருத்துவக் கல்வியில் தரத்தை உறுதி செய்வதும், அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பை வழங்குவதும் ஆகும்.
முன்பு மாநில அளவில் தனித்தனியே நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வுகள் இப்போது NEET மூலம் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான NEET UG 2026 கடந்த மே மூன்றாம் தேதி நடைபெற்ற முடிந்தது. ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாணவர்களே கவனிங்க..! நீட் தேர்வு...! புதிய ஆடை கட்டுப்பாடுகள் அறிவிப்பு..!!
மத்திய அரசு அனுமதி அளித்த பிறகு மறு தீர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. சிபிஐ விசாரணைக்கு தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் பதிவுகள் தேவையான உதவிகளை தேசிய தேர்வு முகமை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு இருப்பது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: இபிஎஸ் போட்ட பிச்சையில் வெற்றி..! ஈனத்தனம் இல்லையா..? அதிமுக கண்டனம்..!