×
 

இனி இவர்களுக்கு ரூ.2000 அபராதம்... நெல்லை மாநகராட்சி அதிரடி உத்தரவு...!

மாடுகள் அடிக்கடி நடுரோட்டில் நின்று கொண்டு போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இது தவிர சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளும் மாடுகளின் மீது மோதி விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர்.

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்க முடிவு

தமிழகம் முழுவதும் ஏற்கனவே தெரு நாய்களின் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. வாகனங்களில் செல்வோரை விரட்டுவது, சாலையில் நடந்து செல்லும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் துரத்தி துரத்தி கடிப்பது என தெருநாய்கள் குறித்த புகார்களை கையாள முடியாமல் ஊராட்சி முதல் மாநகராட்சிகள் வரை திணறி வருகின்றன.

இந்நிலையில் நெல்லையில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள் தினந்தோறும் பிரச்சனைகளை சந்தித்து வருவதாக புகார்கள் குவிந்து வருகின்றன. எனவே சாலைகளில் மாடுகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக நெல்லை மாநகராட்சி அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

நெல்லை மாநகராட்சியில் 55க்கும் மேலான வார்டுகள் உள்ளன. இங்கு நெல்லை, தச்சநல்லூர், மேலப்பாளையம் உள்ளிட்ட 4 மண்டலம் வாரியாக உதவி ஆணையர்  அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: நெல்லையில் மீண்டும் பயங்கரம்... கல்லூரி மாணவனுக்கு அரிவாள் வெட்டு... வெளியான பகீர் காரணம்...!

நெல்லை மாநகராட்சி பகுதிகளான ஜங்ஷன், டவுன், கொக்கரகுளம், மேலப்பாளையம், புதிய பேருந்து நிலையம், மதுரை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் சாலைகளில் மாடுகளாக சுற்றி திரிகின்றன. 

இந்த மாடுகள் அடிக்கடி நடுரோட்டில் நின்று கொண்டு போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இது தவிர சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளும் மாடுகளின் மீது மோதி விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். ஒரு சிலர் உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. 

இதை தடுக்கும் விதமாக மாநகராட்சி அதிகாரிகள் ரோடுகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து அவைகளின் உரிமையாளர்களுக்கு அபராத விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

அதனைத் தொடர்ந்து நெல்லை மாநகராட்சி கமிஷனர் மோனிகா ராணா மாநகராட்சி பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகளைப் பிடித்து அவைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் மாநகர நல அலுவலர், சுகாதாரத்துறை அதிகாரிகள் நெல்லை நகர் முழுவதும் ஆய்வு செய்து சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஏன் விட்டு வெச்சு இருக்கீங்க?.. கவின் கொலை குற்றவாளி சுர்ஜித்தின் தாய்க்கு பிடிவாரண்ட்... கோர்ட் அதிரடி உத்தரவு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share