×
 

200 ஆண்டுகளாக நீடிக்கும் சர்ச்சை!! இந்தியாவை மீண்டும் வம்பிழுக்கும் நேபாளம்!! தொற்றுகிறது பதற்றம்!

நேபாள அரசு, இந்திய பகுதிகள் அடங்கிய வரைபடத்தை இணைத்து சர்ச்சைக்குரிய வகையில் புதிய கரன்சிகளை வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்குச் சொந்தமான காலாபானி, லிபுலேக், லிம்பியாதுரா பகுதிகளை தனது நாட்டு வரைபடத்தில் இணைத்து, நேபாள அரசு புதிய 100 ரூபாய் நோட்டை வெளியிட்டுள்ளது. 2020-ல் தொடங்கி நிலையிலேயே இருந்த சர்ச்சையை மீண்டும் தூண்டும் வகையில் நேபாள ராஷ்டிரா வங்கி இந்த நோட்டுகளை அச்சடித்துள்ளது.

புதிய நோட்டின் மையப் பகுதியில் மங்கலான பச்சை நிறத்தில் நேபாளத்தின் “புதிய அதிகாரப்பூர்வ வரைபடம்” அச்சிடப்பட்டுள்ளது. இந்த வரைபடத்தில் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள மூன்று முக்கிய எல்லைப் பகுதிகளும் நேபாளத்துக்குள் காட்டப்பட்டுள்ளன. நோட்டின் முன்பக்கத்தில் “லும்பினி – புத்தர் பிறந்த இடம்” என்ற வாசகத்துடன் அசோகத் தூணும், இடது ஓரத்தில் எவரெஸ்ட் சிகரமும், பின்பக்கத்தில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகமும் இடம்பெற்றுள்ளன.

1816-ல் பிரிட்டிஷாருடன் நேபாளம் போட்டுக் கொண்ட சுகௌலி ஒப்பந்தப்படி, காலி ஆற்றுக்கு கிழக்கே உள்ள நிலப்பரப்பு முழுவதும் நேபாளத்துக்கு எனவும், மேற்கே உள்ள பகுதி பிரிட்டிஷ் இந்தியாவுக்கு எனவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் காலி ஆற்றின் தொடக்கப் புள்ளியை நேபாளம் வேறு இடமாகவும், இந்தியா வேறு இடமாகவும் கருதுவதால் சுமார் 400 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இப்பகுதி 200 ஆண்டுகளாக சர்ச்சைக்குரியதாக உள்ளது.

இதையும் படிங்க: நாளை பீகார் 2ம் கட்ட தேர்தல்!! இந்தியா - நேபாளம் எல்லை மூடல்! பணிகள் விறுவிறு!

2020-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு இதே வரைபடத்தை அதிகாரப்பூர்வமாக்கி புதிய நாட்டு வரைபடத்தை வெளியிட்டபோது இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதைத் தொடர்ந்து இந்தியா லிபுலேக் சாலையைத் திறந்தபோது இரு நாடுகளுக்கு இடையிலான உறவு பெரும் பதற்றமடைந்தது.

தற்போது மீண்டும் அதே சர்ச்சைக்குரிய வரைபடத்தை புதிய நோட்டில் அச்சிட்டு நேபாளம் வெளியிட்டிருப்பது இந்தியாவை மீண்டும் ஆத்திரமூட்டும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இந்திய வெளியுறவுத்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறினாலும், இந்திய ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நைஜீரியாவில் மாணவர்கள் கடத்தல் சம்பவம்..!! அவசர நிலை அறிவிப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share