×
 

நேபாள வன்முறையில் இந்திய பெண் பலி! வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி தகவல்!!

நேபாளத்தில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தின் போது, இந்திய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்துல ஊழல், வேலையின்மை, நெபோடிசம் (வாரிசு அரசியல்) மாதிரியான பிரச்சினைகளுக்கு எதிரா இளைஞர்கள் (ஜென் Z) ஸ்டார்ட் பண்ணின போராட்டம், செப்டம்பர் 4 அன்று சமூக வலைதள தடையால (பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப் உட்பட 26 பிளாட்ஃபார்ம்கள்) செம கொந்தளிப்பா மாறியது. போராட்டக்காரர்கள் "ஊழல் ஒழி, சமூக வலைதள தடை நீக்கு, ஆட்சி மாற்றம்"னு கோரி, செப்டம்பர் 8 அன்று காத்மாண்டுல போராட்டம் நடத்தினாங்க. 

இது வன்முறையா முடிஞ்சு, போலீஸ் தடியடி, கண்ணீர் புகை, ரப்பர் புல்லெட்ஸ் யூஸ் பண்ணியும் கண்ட்ரோல் ஆகல. துப்பாக்கி சூடு நடத்தி, 19 போராட்டக்காரர்கள் (மொத்தம் 22, 3 போலீஸ் உட்பட) செத்துட்டாங்க, 1,200-க்கும் மேற்பட்டோர் காயமடைஞ்சாங்க. போராட்டக்காரர்கள், செப்டம்பர் 9 அன்று காத்மாண்டுல நாடாளுமன்றம், சிங்கா தர்பார் (தலைமை செயலகம்), உச்சநீதிமன்றம், பிரதமர் கே.பி. சர்மா ஒலி இல்லம், முன்னாள் பிரதமர்கள் வீடுகள், UML கட்சி அலுவலகம், கான்டிபூர் மீடியா ஆஃபிஸ் எல்லாம் சூறையாடி, தீ வச்சு எரிச்சாங்க. ஏர்போர்ட் க்ளோஸ், ட்ரான்ஸ்போர்ட் ஷட் டவுன், ராணுவம் டெப்ளாய் ஆகி, ஊரடங்கு போட்டாங்க.

இந்த வன்முறையால, 700-க்கும் மேற்பட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் (பசுபதிநாத் கோவில், போகாரா போக) சிக்கி தவிச்சாங்க. இப்போ இயல்பு திரும்பியதால, அவங்க பத்திரமா மீட்கப்படறாங்க. இந்திய வெளியுறவு அமைச்சகம், 14 ஸ்பெஷல் ஃப்ளைட்ஸ் (ஏர் இந்தியா, இண்டிகோ) ஏற்பாடு பண்ணி, டெல்லி, மும்பை, கொல்கத்தா, லக்னோவுக்கு பயணிகளை அனுப்பறது. MP, UP, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, வெஸ்ட் பெங்கால், கேரளா, தெலுங்கானா மாதிரியான ஸ்டேட்ஸ்ல இருந்து 500-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்காங்க.

இதையும் படிங்க: இந்தியாவுக்குள் ஊடுருவ முயலும் நேபாள சிறை கைதிகள்!! எல்லையில் உச்சக்கட்ட அலர்ட்!

 MP CM மோகன் யாதவ், 14 சத்தர்பூர் பயணிகளுக்கு ஹெல்ப் கோரி மோடியை கான்டாக்ட் பண்ணினார். UP CM யோகி ஆதித்யநாத், ஸ்பெஷல் செல் ஸெட் அப் பண்ணி, 22 பயணிகளை பாதுகாப்பா கொண்டு வந்தாங்க. ராஜஸ்தான் போலீஸ் ஸ்பெஷல் செல், 3 மேயர்களோட டிரிப் கேன்சல் ஆக்கி, பயணிகளுக்கு ஹெல்ப் குடுத்தாங்க. இந்திய தூதரகம், காத்மாண்டு: +977-9808602881, +977-9810326134 என்று ஹெல்ப்லைன் கொடுத்திருக்கு.

இந்த போராட்டத்துல, இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு. உத்தரப் பிரதேசம் காஷியாபாத்தைச் சேர்ந்த ராம்வீர் சிங் கோலா (58), அவரது மனைவி ராஜேஷ் தேவி (55) ஆகியோர், குழந்தைகளோட செப்டம்பர் 7 அன்று காத்மாண்டு பசுபதிநாத் கோவிலுக்கு போனாங்க. செப்டம்பர் 9 இரவு, ஹையத் ரெஜென்சி 5-ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருக்கும்போது, போராட்டக்காரர்கள் உள்ளே புகுந்து தீ வச்சுட்டாங்க. 

மீட்புக்குழு, பாதுகாப்பு மெத்தைகள் விரிச்சு, 4வது மாடியில இருந்து குதிக்க சொன்னது. ராம்வீர் சிறுகாயங்களோட தப்பினார், ஆனா ராஜேஷ் தேவி பலத்த காயமடைஞ்சு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். செப்டம்பர் 10 இரவு, ராஜேஷ் தேவி பரிதாபமா உயிரிழந்தார். அவர் குடும்பம், "பசுபதிநாத் தரிசனத்துக்கு போனோம், போராட்டத்துல சிக்கி தாயை இழந்தோம்"னு சொல்லி, மோடியிடம் உதவி கோரினாங்க. இந்த சம்பவம், இந்திய-நேபாள உறவுகளில் புதிய பதற்றத்தை உண்டு பண்ணியிருக்கு.

இதையும் படிங்க: நேபாள ஆட்சி கவிழ இந்தியாதான் காரணம்!! சதி செஞ்சுட்டாங்க! சர்மா ஒலி விளக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share