மோடி என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட்! அடிக்கடி போன்ல பேசுவோம்! ஐஸ் வைக்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!
'பிரதமர் மோடி நெருங்கிய நண்பர். இந்தியா-இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நெருங்கிய உறவு உள்ளது' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்து உள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில் பிப்ரவரி 25-ஆம் தேதி இரண்டு நாள் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.
இது 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு மோடியின் இரண்டாவது இஸ்ரேல் விஜயமாகும். அப்போது முதல் இந்திய பிரதமராக இஸ்ரேல் சென்ற பெருமையைப் பெற்றார். இப்போது 9 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இந்தப் பயணம், இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
இஸ்ரேல் அரசு கூட்டத்தில் பேசிய நெதன்யாகு, "பிரதமர் மோடி என் நெருங்கிய நண்பர். இந்தியா-இஸ்ரேல் இடையே நெருங்கிய உறவு உள்ளது. நாங்கள் அடிக்கடி தொலைபேசியில் பேசுகிறோம், ஒருவரையொருவர் சந்திக்கிறோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 9 ஆண்டுகளுக்கு பின் மரண மாஸ் சம்பவம்!! நம்ம லிஸ்ட்லயே இல்லையே!! நெதன்யாகு அழைப்பில் இஸ்ரேல் பறக்கும் மோடி!
"இந்தியா ஒரு உலக சக்தி. இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரம், இராஜதந்திரம், பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரிக்கும்" என்றும் கூறினார். மோடியின் வருகை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என அவர் வலியுறுத்தினார்.
இந்தப் பயணத்தில் பாதுகாப்பு, வேளாண்மை, பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவை முக்கிய விவாதத் தலைப்புகளாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது பெரிய இலக்கு. உயர் தொழில்நுட்பம், AI, குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற துறைகளில் ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும்.
மோடி இஸ்ரேல் நாடாளுமன்றமான க்னெசெட்டில் (Knesset) உரையாற்றுவார். யாத் வாஷெம் (Yad Vashem) நினைவிடம் செல்வது, புதுமை நிகழ்ச்சியில் பங்கேற்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் உள்ளன.
இரு தலைவர்களும் தனிப்பட்ட நட்பு மூலம் உறவுகளை வளர்த்துள்ளனர். கடந்த காலங்களில் தொலைபேசி உரையாடல்கள், பரஸ்பர விஜயங்கள் நடந்துள்ளன. சமீபத்தில் நெதன்யாகு இந்தியா வருவது ரத்தான நிலையில், மோடியின் இந்தப் பயணம் இரு நாடுகளின் உறவை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்துக்கு மத்தியில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியா-இஸ்ரேல் உறவு பாதுகாப்பு, தொழில்நுட்பம், பொருளாதாரத்தில் வலுவான அடித்தளம் கொண்டது. மோடியின் இந்தப் பயணம், இரு நாடுகளின் நட்பை உலகுக்கு மீண்டும் நிரூபிக்கும். பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இணைந்து செயல்படுவது இரு தலைவர்களின் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 9 ஆண்டுகளுக்கு பின் மரண மாஸ் சம்பவம்!! நம்ம லிஸ்ட்லயே இல்லையே!! நெதன்யாகு அழைப்பில் இஸ்ரேல் பறக்கும் மோடி!