×
 

#BREAKING: செப்.9 ல் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும்...தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

செப்டம்பர் ஒன்பதாம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 14வது துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், உடல் நலம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார்.

2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் துணை ஜனாதிபதியாக பதவியேற்றார். அவருடைய பதவி காலம் 2027-ம் ஆண்டு வரை உள்ள நிலையில், நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் ஒன்றை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.

இந்த ராஜினாமா மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் நடுவில் அறிவிக்கப்பட்டதால், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. சிலர் இதை உடல்நலப் பிரச்சினையாக ஏற்றுக்கொண்டாலும், மருத்துவ அறிக்கை இல்லாததால் இதற்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.

இதையும் படிங்க: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் தவெக...அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

உண்மையாகவே உடல்நிலை பிரச்சினை தான் காரணமா? அல்லது அரசியல் அழுத்தத்தின் காரணமாக ராஜினாமா செய்தாரா? என்ற கேள்விகள் எழுந்தன. குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமாவை ஏற்பதாக உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

அவரது ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பதவி விலகலை அடுத்து அந்த பதவிக்கு தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. துணை குடியரசு தலைவர் தேர்தல் அலுவலராக மாநிலங்களவைச் செயலாளர் பிரமோத் சந்திரா மோடி நியமனம் செய்யப்பட்டார்.

மாநிலங்களவை இணைச் செயலாளரான கரிமா, மாநிலங்களவை இயக்குனர் விஜயகுமார் ஆகியோரை உதவி தேர்தல் அதிகாரிகளாக தேர்தல் ஆணையம் நியமித்தது. 

இந்த நிலையில் செப்டம்பர் ஒன்பதாம் தேதி துணை குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் இரண்டாம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் ஒன்பதாம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும் புதிய துணை ஜனாதிபதியை மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: எல்லாத்துக்கும் limit இருக்கு... பெருமளவு மக்களை நீக்கினால்... தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் பகிரங்க எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share