×
 

அடடே.. இப்போ மும்பையிலுமா..!! அமேசானின் அசத்தல் மூவ்..!!

அமேசான் நிறுவனம் 10 நிமிட டெலிவரி சேவையை தற்போது மும்பைக்கு விரிவுபடுத்தியுள்ளது.

இந்தியாவின் வேகமான ஈ-காமர்ஸ் சந்தையில் முக்கிய இடம் பெற்றுள்ள அமேசான் நிறுவனம், அதன் 'அமேசான் நவ்' என்ற 10 நிமிட டெலிவரி சேவையை மும்பைக்கு விரிவுபடுத்தியுள்ளது. இது பெங்களூரு மற்றும் டெல்லியில் ஏற்கனவே வெற்றிகரமாக இயங்கி வரும் சேவையின் தொடர்ச்சியாகும். 

2025 ஜனவரியில் பெங்களூருவில் தொடங்கப்பட்ட இந்த சேவை, தற்போது மும்பையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் கிடைக்கிறது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் கிராசரி, தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள், எலக்ட்ரானிக் உபகரணங்கள், பெஸ்டிவ் சப்ளைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அத்தியாவசியப் பொருட்களை 10 நிமிடங்களுக்குள் வீட்டுக்கு டெலிவர் செய்யப்படும்.

இதையும் படிங்க: அடேங்கப்பா..!! மும்பையின் பணக்கார விநாயகர் சிலைக்கு ரூ.474 கோடிக்கு காப்பீடா..!!

அமேசான் இந்தியா துணைத் தலைவர் மற்றும் நாட்டு மேலாளர் சமீர் குமார் கூறுகையில், "பெங்களூருவில் அமேசான் நவை அறிமுகப்படுத்தியதிலிருந்து, நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக வெற்றி கிடைத்துள்ளது. தினசரி ஆர்டர்கள் மாதந்தோறும் 25% வளர்ச்சி காட்டுகின்றன. பிரைம் உறுப்பினர்கள் இந்த சேவையைப் பயன்படுத்திய பிறகு தங்கள் ஷாப்பிங் அளவை மூன்று மடங்கு அதிகரித்துள்ளனர்," என்றார். 

இந்த வெற்றியைத் தொடர்ந்து, அமேசான் பெங்களூரு, டெல்லி மற்றும் மும்பையில் 100க்கும் மேற்பட்ட மைக்ரோ-புல்ஃபில்மென்ட் சென்டர்களை (சிறிய ware houses) அமைத்துள்ளது. வருட இறுதிக்குள் இதன் எண்ணிக்கையை நூற்றுக்கணக்கில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இந்த சென்டர்கள் ஹைப்பர்லோக்கல் டிமாண்ட் அடிப்படையில் பொருட்களை அமைத்து, தொழில்நுட்பம் மூலம் விரைவான டெலிவரியை உறுதி செய்கின்றன.

இந்தியாவின் குவிக்-காமர்ஸ் சந்தையில் பிளிங்கிட், ஜெப்டோ, ஸ்விகி இன்ஸ்டாமார்ட் போன்ற போட்டியாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், அமேசான் இந்த சேவையை விரிவுபடுத்துவது பெரிய சவாலாகும். இருப்பினும், அமேசானின் வலுவான இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் பிரைம் உறுப்பினர்களுக்கான இலவச டெலிவரி சலுகைகள் இதை வெற்றிகரமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த சேவை தற்போது பெங்களூரு, டெல்லி, மும்பையின் குறிப்பிட்ட ஊர்களில் மட்டுமே கிடைக்கிறது. விரைவில் மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். அமேசான் இன் ஆப்-இல் '10 மின்ஸ்' ஐகானை தேடி உங்கள் பின்கோடில் சேவை கிடைக்கிறதா என சரிபார்க்கலாம். 

இந்த விரிவாக்கம், பண்டிகை சீசனுக்கு முன் நிகழ்ந்துள்ளது, இதன் மூலம் வாடிக்கையாளர்கள் விரைவான ஷாப்பிங் அனுபவத்தைப் பெறலாம். அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் வரும் செப்டம்பர் 23ம் தேதி அன்று தொடங்குகிறது, பிரைம் உறுப்பினர்களுக்கு 24 மணி நேரம் முன் அணுகல். இது இந்தியாவின் ஈ-காமர்ஸ் துறையில் புதிய போட்டியைத் தூண்டும் என்பது உறுதி. 

இதையும் படிங்க: 21 பேரை காவு வாங்கிய மும்பை கனமழை!! முடங்கி கிடக்கும் மக்கள்!! இன்று ஆரஞ்ச் அலர்ட்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share