தவளை இனத்திற்கு ஹீரோவின் பெயர்..! ஆராய்ச்சியாளர்கள் சொன்ன புது தகவல்..!
ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் 'லியோனார்டோ டிகாப்ரியோ'வின் பெயரை புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட தவளைக்கு சூட்டி இருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
ஹாலிவுட்டில் எப்படி பட்ட படைப்புகள் வந்தாலும், அனிமேஷனில் நெருங்கமுடியாத உயரத்தை தொட்டாலும், இன்றளவும் அனைவராலும் மறக்கமுடியாத ஒரே படம் 'டைட்டானிக்' என்றால் மிகையாகாது. 1997ல் வெளியான இந்த திரைப்படத்தை நினைவு கூர்ந்தால் உடனே நினைவுக்கு வருவது மூன்று விஷயம் தான், ஒன்று ஜேக் மற்றொன்று ரோஸ் இருவரையும் கடந்து நினைவுக்கு வருவது பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தான். இன்று ஜாக்கி ஜான், புருஸ்லீ, அர்னால்டு என்று பல பெயர் வந்தாலும் இன்றளவும் மறக்கமுடியாத ஒரே ஹீரோ பெயர் லியோனார்டோ டிகாப்ரியோ.
இந்த அளவிற்கு புகழ் பெற்ற இவர் நடிப்பு மட்டும் அல்லாது சுற்றுச்சூழலையும் வனவிலங்கு பாதுகாப்பு பற்றியும் அடிக்கடி பேசுபவர் என்பதால் அதற்காகவே ஆஸ்கார் விருது பெற்றவர். இந்த நிலையில், நடிகர் லியோனார்டோ "டிகாப்ரியோவின் நினைவாக" ஒரு தவளைக்கு "பிலோனாஸ்டஸ் டிகாப்ரியோ" என்று பெயரிடப்பட்டது.
இதையும் படிங்க: எடப்பாடி ஓ.கே. சொன்னா அடுத்த நொடியே அதைச் செய்ய தயார்... ஓபிஎஸை எச்சரித்த ஆர்.பி. உதயக்குமார்...!
தனியார் பத்திரிகை ஒன்றில் இதனை பற்றி குறிப்பிடுகையில், ஈக்வடாரின் எல் ஓரோ மாகாணத்தின் மேற்குமலைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தவளை தனித்துவமானது என்று கூறப்படுகிறது. இதன் உடலில் கருமையான புள்ளிகள் மற்றும் தனித்துவமான விரல் வடிவம் கொண்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பை, ஈக்வடார் தேசிய பல்லுயிர் நிறுவனம், ஈக்வடார் கத்தோலிக்க பல்கலைக்கழகம் மற்றும் சான் பிரான்சிஸ்கோ குய்டோ பல்கலைக்கழகம் (USFQ) உள்ளிட்ட பல ஈக்வடார் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள், இந்த இனத்தை கண்டுபிடித்து உள்ளனர்.
மத்திய நேபாளத்திலிருந்து இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்திற்கு இடையில் கடந்த அக்டோபர் மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய இன பாம்புக்கு 'அங்குகுலஸ் டிகாப்ரியோய்' என்று இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டெல்லியில், பா.ஜ.க. புதிய முதல்வர் நாளை தேர்வு: வியாழக்கிழமை, 3 அலங்கார மேடைகளுடன் பிரம்மாண்ட பதவி ஏற்பு விழா