”தாலியில் இருக்க மஞ்சள் கூட காயலையே...” - புதுப்பெண் கண் முன்னே கணவரை அடித்தே கொன்ற சகோதரர்கள்... திருமணமான சில மணி நேரங்களில் கோரம்...!
ஆந்திராவில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட துணை தாசில்தார் கணவர் அடித்து ஆணவ கொலை.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராயவரம் மண்டல துணை தாசில்தாராக சந்தியா பணி புரிந்து வருகிறார். அதே பகுதியில் உள்ள வேம்பள்ளி நகரில் ஜவுளி கடை நடத்தி வருபவர் சூரிய பிரகாஷ் ராவ். துணை தாசில்தார் சந்தியா, சூரிய பிரகாஷ் ராவ் ஆகிய இருவரும் ஒன்றாக படித்தவர்கள் என்பதால் இருவருக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக காதல் இருந்து வந்தது.
ஆனால் இந்த காதலுக்கு சந்தியா குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று இருவரும் அன்னவரம் சென்று அங்குள்ள கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்து வேம்பள்ளியில் உள்ள சூரிய பிரகாஷ் ராவ் வீட்டிற்கு சென்றனர்.தங்களுடைய சகோதரி துணை தாசில்தார் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதை அறிந்த அவருடைய சகோதரர்கள் சந்திரப்பா, கிரிபாபு ஆகியோர் நண்பர்களுடன் சேர்ந்து நேற்று இரவு வேம்பள்ளியில் உள்ள சூரிய பிரகாஷ் ராவ் வீட்டிற்கு சென்று அவரை வெளியில் இழுத்து வந்து கற்கள், கட்டைகள் ஆகியவற்றால் அடித்து அதே இடத்தில் கொலை செய்தனர்.
இந்நிலையில் தப்பி ஓட முயன்ற துணைத் தாசில்தார் சகோதரர்கள் இரண்டு பேரையும் அப்பகுதி பொதுமக்கள் பிடித்து போலீசை வரவழைத்து ஒப்படைத்தனர். இந்த விவகாரத்தில் அவர்களுடைய நண்பர் தப்பி ஓடிய நிலையில் சகோதரர்கள் இருவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்துகின்றனர். தப்பி ஓடிய நண்பரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சூரிய பிரகாஷராவ் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே ஷாக்... திடீரென விழுந்து சுக்கு நூறாக நொறுங்கிய ராணுவ விமானம்... 15 பேர் பலி...!!
ஆணவ கொலை விவகாரத்தில் திருமணம் செய்து கொண்ட சற்று நேரத்திலேயே துணை தாசில்தாரின் கணவரை தாசில்தாரின் சகோதரர்களே அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: 2026 சட்டமன்ற தேர்தல்... பாஜகவில் ஐக்கியமான சரத்குமார் எடுத்த பகீர் முடிவு... காரணம் என்ன?