ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சுத்துப்போட்ட என்ஐஏ... மும்பையில் 2 ஸ்லீப்பர் செல்கள் அதிரடி கைது..!
ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் இரு ஸ்லீப்பர் செல்களை மும்பை விமான நிலையத்தில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
ஈராக் மற்றும் சிரியாவில் இயங்கும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் இரு ஸ்லீப்பர் செல்களை மும்பை விமான நிலையத்தில் வைத்து தேசிய விசாரணை முகமை (என்ஐஏ) அதிகாரிகள் இன்று கைது செய்தனர். 2023ம் ஆண்டு புனேயில் ஐஇடி வெடிபொருட்களை உருவாக்கி, அதை பரிசோதனை செய்யும் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த வழக்கில் இருவரும் தேடப்பட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரின் பெயர் அப்துல்லா பியாஸ் ஷேக் என்ற தியாபர்வாலா மற்றும் தலிஹா கான் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இருந்து இந்தியாவுக்கு இருவரும் விமானம் மூலம் நேற்று இரவு வந்தனர்.
இதையும் படிங்க: இனிமே தான் ஆட்டம் ஆரம்பம்! ஆதாரம் திரட்டும் என்.ஐ.ஏ.! கருவறுக்க காத்திருக்கும் இந்தியா
அப்போது மும்பை விமான நிலையத்தில் இருந்த குடியேற்ற அதிகாரிகள் இருவரையும் மடக்கிப் பிடிக்க முற்பட்டபோது பதுங்கினர். இதையடுத்து, இரவு நடத்திய தேடுதலில் இருவரையும் போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
இதையடுத்து என்ஐஏ அமைப்புக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் வந்து இருவரையும் கைது செய்து தங்கள் பாதுகாப்புக்குள் கொண்டு வந்தனர். இரு குற்றவாளிகளும் கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தநிலையில் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவருக்கும் ஏற்கெனவே மும்பை சிறப்பு நீதிமன்றம் பிணையில் வெளவரமுடியாத வாரண்ட் பிறப்பித்திருந்தது. மேலும், இருவர் குறித்து யாரேனும் துப்புக்கொடுத்தால் ரூ.3 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் என்ஐஏ தெரிவித்திருந்தது.
கைது செய்யப்பட்ட இருவரும், ஏற்கெனவே ஐஎஸ் தீவிரவாதிகள் பலருடன் சேர்ந்து இந்தியாவில் தீவிரவாத செயல்களுக்கு திட்டம் தீட்டி, அமைதியைக் குலைக்க திட்டமிட்டிருந்தனர். அதில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 6 பேருடன் இந்த 2 இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் அப்துல்லா பியாஸ் என்பவர் புனேயில் கோந்த்வா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ஐஇடி வெடிகுண்டுகளை தயாரித்து வெடிக்க வைக்க முயன்றதாக குற்றச்சாட்டு இருக்கிறது. இந்த தீவிரவாதிகள் மீது யுஏபிஏ சட்டம், ஐபிசி வெடிமருந்து தடுப்புச்சட்டம், ஆயுதங்கள் தடுப்புச் சட்டம் ஆகியவை கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அப்துல்லா பியாஸ் ஷேக் என்ற தல்ஹா கான் தவிர்த்து முகமது இம்ரான் கான், முகமது யூனுஸ் சகி, அப்துல் காதர் பதான், சிமாப் நசுரூதீன் காசி, ஜுல்பிகர் அலி பர்தோவாலா, ஷாமில் நாச்சான், ஆகிப் நாச்சான், ஷாநவாஸ் ஆலம் ஆகியோர் ஏற்கெனவே கைதாகி சிறையில் உள்ளனர்.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்.. வழக்கு என்.ஐ.ஏவிடம் ஒப்படைப்பு.. மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி..!