தொடரும் ரெட் அலர்ட்... நீலகிரியில் 2வது நாளாக சுற்றுலா தளங்கள் மூடல் - எப்போது திறப்பு?
சுற்றுலா தளங்கள் ரெட் அலார்ட் திரும்ப பெறும் வரை தற்காலிகமாக மூடப்படுவதாக நீலகிரி மாவட்ட வன அலுவலர் கௌதம் அறிவித்துள்ளார்.
தொட்டபெட்டா காட்சி முனை, கூடலூர் சாலையில் உள்ள பைன் பாரஸ்ட், சூட்டிங் மட்டம், பைக்காரா நீர்வீழ்ச்சி, அவலாஞ்சி சூழல் சுற்றுலா மையம், குன்னூர் அருகே உள்ள டால்பின் நோஸ், லென்ஸ் ராக் ஆகிய சுற்றுலா தளங்கள ரெட் அலார்ட் திரும்ப பெறும் வரை தற்காலிகமாக மூடப்படுவதாக நீலகிரி மாவட்ட வன அலுவலர் கௌதம் அறிவித்துள்ளார்.