உஷார் மக்களே..! உதற போகுது... நீலகிரி, கொடைக்கானலுக்கு உறைபனி எச்சரிக்கை...!
நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு உறைபனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் உறைபனி ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளையும் நாளை மறுநாளும் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29-ந்தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் 30-ந்தேதி தென்கடலோர தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரே குளிருப்பா..!! ரோட்டுல கால் வெக்க முடியல.. இன்று ஊட்டியில் உறைபனிக்கு வாய்ப்பாம்..!! ஜாக்கிரதை மக்களே..!!
இன்று முதல் 28-ந்தேதி வரை தமிழகத்தின் நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING கோரதாண்டவத்திற்கு தயாராகும் டிட்வா புயல்... தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தளங்கள் மூடல்...!