×
 

எல்லா துறைகளிலும் முதல்வர் கவனம்..! தவெக புது வெர்ஷன்.. அமைச்சர் நிர்மல் குமார் உறுதி..!

அனைத்து துறைகளையும் முதல்வர் விஜய் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார் .

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் நிர்மல் குமார் சாமி தரிசனம் செய்தார். பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அனைத்து துறைகளையும் முதல்வர் விஜய் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறினார்.

சட்டம் ஒழுங்கு குறித்தும், ஒவ்வொரு துறை ரீதியாகவும் நாள்தோறும் முதலமைச்சர் ஆய்வு செய்து வருகிறார் என்றும் தெரிவித்தார். வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும். கனிமவள கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

முதலமைச்சர் துறை சார்ந்த உயர் அதிகாரியுடன் ஆய்வு செய்து வருகிறார் என்றும் துறை வாரியாக ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். பட்ஜெட் தாக்கலுக்கு பிறகே புதிய திட்டங்களை செயல்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார். தேவைப்படும் நேரத்தில் செய்தியாளர்களைச் சந்திப்பதில் முதலமைச்சர் விஜய்க்கு எந்தத் தயக்கமும் இல்லை என்றும் பட்ஜெட்டில் அறிவித்த பிறகு ரூ. 2500 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் நிதி ஆதாரங்களை சரி செய்த பிறகு அரசு செயல்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.  தமிழக வெற்றி கழகம் எந்த வெர்ஷனும் இல்லை என்றும் புது வர்ஷன் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: எடப்பாடியை முதல்வர் விஜய் சந்திக்காதது ஏன்? பரபரப்பு அரசியல்... அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!

சட்டவிரோத குவாரிகள் கணக்கெடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கும் பணிகள் தொடங்கியதாக கூறியுள்ளார். போதையில்லா தமிழ்நாடு என்ற முதலமைச்சர் விஜய்யின் நோக்கத்தை நிறைவேற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மதுரை மாவட்டத்தில் குட்கா ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார். 

இதையும் படிங்க: NDA கூட்டணி கட்சிகளை அழைக்கல..! CPI அலுவலகத்தில் தவெக நிர்வாகி நிர்மல் குமார் விளக்கம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share