×
 

மனசாட்சியே இல்லையா? கடன் வசூலிக்க இப்படி தான் செய்வீங்களா? நிதி நிறுவனங்களை வறுத்தெடுத்த நிர்மலா சீதாராமன்..!

வாடிக்கையாளர்களிடம் கடனை வசூலிக்கும் போது நன்மதிப்பை கடைபிடிக்க வேண்டும் என்று மதிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தி உள்ளார்.

கொடுத்த கடனை திருப்பி வசூலிக்கும் போது வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை கடைபிடிக்க வேண்டும் என்று மதிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தினார். டெல்லியில் நடந்த வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மாநாட்டில் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்..

அப்போது பேசிய அவர், கடன்களை வசூலிக்கும் போது வாடிக்கையாளர்களிடம் மரியாதையாகவும் கண்ணியமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கியின் விதிகளை பின்பற்றி தான் கடன்களை வசூலிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 500 ரூபாய் கடனை செலுத்தாதவர்களிடம் நிதி நிறுவன ஊழியர்கள் மிகவும் கடினமாக நடந்து கொண்டதாக செய்திகள் வெளியாக்கியதாகவும்., உங்களின் வேலையைத்தான் செய்கிறீர்கள் ஆனாலும் மனசாட்சியில்லாமல் செயல்படக்கூடாது என்று கூறினார்.

வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வங்கிகளால் வழங்கப்படும் மொத்த கடலில் தற்போது 24 சதவீதம் மட்டுமே வழங்குவதாகவும் 2047-ல் குறைந்தது 50% ஆக இதனை உயர்த்த வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் விக்சித் பரத் 2047 இலக்கை அடைய உதவும் வகையில் வக்கிசாரா நிதி நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் 2021 இல் 24 லட்சம் கோடி ரூபாயாக இருந்த வங்கி சாரா நிதி நிறுவனங்கள் அளித்த கடன் தொகை 2025-ல் 48 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பதாகவும் இது இரட்டிப்பு என்றும் தெரிவித்த நிர்மலா சீதாராமன், 20047 இல் வங்கிகள் வழங்கும் கடன் தொகையில் 50 சதவீதம் வங்கி சாரா நிது நிறுவனங்கள் வழங்கிவிட வேண்டும் என்றும் கூறினார். மேலும், அதிக வளர்ச்சி தரக்கூடிய சிறு,குறு, தொழில் நிறுவனங்கள், க்ரீன் எனர்ஜி உள்ளிட்ட துறைகளுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மொழியால் ஒன்றான தாக்கரே சகோதரர்கள்... 2 தசாப்தங்களுக்கு பிறகு சாத்தியமான பிணைப்பு!

இதையும் படிங்க: அலறும் மீனவர்கள்.. அடங்காத இலங்கை! தயவு செஞ்சு நடவடிக்கை எடுங்க.. ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share