×
 

விறுவிறு தேர்தல் பணிகள்... NDA வுக்கே விசுவாசம்! பிரதமர் முன்னிலையில் நிதிஷ்குமார் அதிரடி பேச்சு

என் டி ஏ கூட்டணிக்கு தான் விசுவாசம் என பிகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் தெரிவித்தார்.

நிதீஷ் குமாரின் அரசியல் பயணம் 1990களில் பாஜகவுடன் தொடங்கியது. அப்போது சம்தா பார்ட்டியின் தலைவராக இருந்த அவர், அடல் பஹாரி வாஜ்பேயின் தலைமையிலான என்டிஏவுடன் இணைந்து செயல்பட்டார். 1998-1999ல் மத்தியில் இருந்த என்டிஏ அரசில் ரயில்வே மற்றும் விவசாய அமைச்சராக பணியாற்றினார். 2005ல் பீகார் சட்டமன்றத் தேர்தலில் என்டிஏ வெற்றி பெற்றபோது, நிதீஷ் குமார் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 

இது அவருடைய முதல் முக்கியமான கூட்டணி வெற்றி. வாஜ்பேயின் ஆதரவுடன் அவர் ஆட்சிக்கு வந்ததாக நிதீஷ் தொடர்ந்து கூறி வருகிறார். பெண்கள் பாதுகாப்பு, கல்வி, சாலைகள் போன்ற துறைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டன.ஆனால், 2013ல் நரேந்திர மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், நிதீஷ் என்டிஏவுடன் விலகினார். இது பீகார் அரசியலில் பெரிய திருப்பம். 2015 சட்டமன்றத் தேர்தலில் மகாகத்பந்தன் என்று அழைக்கப்பட்ட இந்தக் கூட்டணி வெற்றி பெற்றது, நிதீஷ் மீண்டும் முதலமைச்சரானார்.

ஆனால், இந்தக் கூட்டணி நீடிக்கவில்லை. 2017ல் ஆர்ஜேடியின் ஊழல் குற்றச்சாட்டுகளால் நிதீஷ் மீண்டும் என்டிஏவுடன் இணைந்தார். பாஜகவுடன் மீண்டும் ஆட்சி அமைத்து, 2020 சட்டமன்றத் தேர்தலில் என்டிஏ 125 இடங்களைப் பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. 

இதையும் படிங்க: #BREAKING: நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றார் சிபி ராதாகிருஷ்ணன்…

இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிச்சயம் வெளியேற மாட்டேன்; NDA கூட்டணிக்கு மட்டுமே விசுவாசமாக இருப்பேன் என நிதீஷ் குமார் கூறியுள்ளார். பீகாரில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி முன்னிலையில் அவர் உறுதியளித்தார்.

இதையும் படிங்க: மரண மாஸ்! வரலாற்று சிறப்பு முடிவு... GST சீர்திருத்தத்தை வரவேற்ற இபிஎஸ்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share