×
 

தெருநாய்களை அப்புறப்படுத்தும் விவகாரம்; இடைக்கால தடை இல்லை; சுப்ரீம் கோர்ட் காட்டம்!

தெரு நாய்கள் விவகாரம் தொடா்புடைய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு, இடைக்கால தடை எதுவும் விதிக்காமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் (NCR) தெரு நாய்கள் கடிக்கிற சம்பவங்கள் பெரிய பிரச்னையா மாறியிருக்கு. இதனால, ஆகஸ்ட் 11-ஆம் தேதி, டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு, “எல்லா தெரு நாய்களையும் உடனே காப்பகங்களுக்கு மாற்றணும்”னு உத்தரவு போட்டிருந்தது. 

ஆனா, இந்த உத்தரவை எதிர்த்து, கான்ஃபரன்ஸ் ஃபார் ஹியூமன் ரைட்ஸ் (இந்தியா) அமைப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செஞ்சிருக்கு. இந்த வழக்கை அவசர வழக்கா எடுத்துக்கணும்னு கோரிக்கை வைச்சாங்க. தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இதை பரிசீலிச்சு, மாலையில் மூணு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த வழக்கை மாற்றி உத்தரவு போட்டார்.

இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 14, 2025) நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த அமர்வுல நீதிபதிகள் சந்தீப் மேத்தாவும், என்.வி. அஞ்சாரியாவும் இருந்தாங்க. மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “கருத்தடை, அறுவை சிகிச்சைகள், தடுப்பூசிகள் போட்டாலும் ரேபிஸ் நோயை தடுக்க முடியலை. 

இதையும் படிங்க: விடிய விடிய நடந்த ஓட்டு எண்ணிக்கை.. டில்லி கிளப் தேர்தலில் வென்று கெத்து காட்டிய பாஜக!!

இதனால குழந்தைகள் உட்பட பலர் பாதிக்கப்படுறாங்க”னு வாதாடினார். மறுபக்கம், மனுதாரர் தரப்பு, “மாநகராட்சி காப்பகங்கள் இல்லை, தெரு நாய்களுக்கு முறையா கருத்தடையோ, தடுப்பூசியோ போடலை. எல்லா நாய்களையும் ஒண்ணா வைச்சு பராமரிச்சா, உணவு விஷயத்துல ஒண்ணையொண்ணு தாக்கி உயிரிழப்பு ஏற்படுது. இதை அனுமதிக்க முடியாது”னு வாதிட்டாங்க.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், “மேம்போக்கா வாதங்களை இங்க வைக்க வேண்டாம். பொறுப்பா நடந்துக்கணும். நாடாளுமன்றம் சட்டங்களை உருவாக்குது, ஆனா செயல்படுத்துறதில்லை. அரசு செயலற்றதால தான் இந்த பிரச்னை இவ்வளவு பெருசாகியிருக்கு. 

ஒரு பக்கம் நாய்க்கடியால மனுஷங்க பாதிக்கப்படுறாங்க, மறுபக்கம் விலங்கு நல ஆர்வலர்கள் பேசுறாங்க. இதுக்கு தெளிவான ஆதாரங்கள் வேணும். மனுதாரர்கள் எல்லாரும் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்யணும்”னு கறாரா சொல்லியிருக்காங்க. உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை எதுவும் விதிக்காம, தீர்ப்பை ஒத்தி வைச்சிருக்காங்க.

தெரு நாய்கள் பிரச்னை டில்லியில் பெரிய விவாதமாக மாறியிருக்கு. ஒரு பக்கம், நாய்க்கடியால மக்கள், குறிப்பா குழந்தைகள் பாதிக்கப்படுறது பெரிய கவலை. கடந்த சில வருஷங்களில், ரேபிஸ் நோயால உயிரிழப்புகள் அதிகமாகியிருக்கு. மறுபக்கம், விலங்கு நல ஆர்வலர்கள், “தெரு நாய்களை ஒரேடியா காப்பகங்களுக்கு மாற்றுறது நடைமுறைக்கு ஒத்து வராது. 

முறையான கருத்தடை, தடுப்பூசி திட்டங்களை செயல்படுத்தினா பிரச்னையை கட்டுப்படுத்தலாம்”னு சொல்றாங்க. ஆனா, மாநகராட்சிகளுக்கு இதுக்கு போதுமான கட்டமைப்பு இல்லை. இந்த மோதல், அரசு நிர்வாகத்தின் செயலற்ற தன்மையை தெளிவா காட்டுது. உச்சநீதிமன்றத்தின் இந்த வழக்கு, மனிதர்களோட பாதுகாப்புக்கும், விலங்கு நலனுக்கும் இடையே ஒரு நியாயமான தீர்வை எதிர்பார்க்க வைக்குது. இனி வர்ற நாட்களில் இந்த வழக்கு என்ன திசையில் போகுதுனு பார்ப்போம்!

இதையும் படிங்க: ரெட் அலர்ட்!! டில்லியில் கொட்டித்தீர்க்கும் கனமழை!! மோசமான வானிலையால் தவிக்கும் விமான பயணிகள்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share