ஆங்கிலம் கலந்து பேசினால் தொலைத்து விடுவேன் - கொலை வெறியுடன் பேசிய சீமான்...!
ஆங்கிலம் கலந்து பேசினால் தொலைத்து விடுவேன் என சீமான் ஆவேசம்
முருகா தமிழ் வாழ வேண்டும் என்றால் உன் பேரன் ஆளனும் - நீ வேலோடு வா நான் தமிழோடு வருகிறேன்- நீ வாக்கு செலுத்தாவிட்டாலும் நான் வெல்வேன் - சீமான் பேச்சு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், தொடர்ந்து காரைக்குடி தேவர் சிலை அருகில் நடந்த பொதுக் கூட்டத்தில் சீமான் உரையாற்றும் போது முருகனிடம் நான் கூறும் போது, முருகா தமிழ் வாழ வேண்டும் என்றால் உன் பேரன் ஆளனும் , நீ வேலோடு வா நான் தமிழோடு வருகிறேன். தேர்தலில் நீ வாக்கு செலுத்தாவிட்டாலும் நான் வெல்வேன் என்றார் மேலும் யாருடா? நீங்க எங்கு இருந்து வருகிறீர்கள். இலவச அறிவிப்புகளை அள்ளி வீசுகிறீர்கள். 20 லட்சத்திற்கு கல்வி கடன் வழங்குவதாக கூறும் நீங்கள் 20 லட்சத்தில் நல்ல கல்வி நிலையத்தை கட்டி தரமான கல்வியை வழங்கலாமே என்றார்
ஐயையோ இந்த பைத்தியக்கார பயல்களிடம் நான் மாட்டிக் கொண்டு படும் பாடு இருக்கே .... ஒரு முறை சட்டசபைக்கு என்னை அனுப்பி பாரு .மதுக்கடையை மூடாமல் எப்படி பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியும் என்றார்.
இதையும் படிங்க: #BREAKING: சொந்த மண்ணில் களமிறங்கும் சீமான்…! காரைக்குடியில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல்..!!
மேலும் கொலை வெறி என தனுஷ் பாடலை பாடி ஆவேசமாக பிரச்சாரம் செய்தார். தமிழில் ஆங்கிலம் கலந்து பேசினால் தொலைத்து விடுவேன். அனைவரும் தூய தமிழில் பேச வேண்டும் என்றார். மேலும் டெல்லியில் சிறப்பான ஆட்சி மூலம் சிறந்த கல்வியை வழங்கிய முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது சாராய ஊழல் என்று கூறி நல்லவர்களை வாழவிட மாட்டார்கள் என்று கூறினார்.
இதையும் படிங்க: "உழைக்கும் மக்கள் சின்னம்... விவசாயி சின்னம்"..! காரைக்குடியில் பாட்டுப் பாடி வாக்கு சேகரித்த சீமான்..!!