விஜயை எதிர்த்தால் திமுக கைக்கூலி! திமுகவை எதிர்த்தால் பாஜக கைக்கூலி... என்னையா உங்க நியாயம்? - சீமான்
விஜயை எதிர்த்து பேசினால் திமுகவின் கைக்கூலி எனக் கூறுவதாக சீமான் தெரிவித்தார்.
தமிழக அரசியலின் புதிய அலை என்று அழைக்கப்படும் நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக் கழகம் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். செப்டம்பர் 13 அன்று திருச்சியில் தொடங்கிய இந்தப் பயணம், மாநிலம் முழுவதும் பரவும் ஒரு பெரிய அரசியல் இயக்கமாக மாறியுள்ளது. நான் வருகிறேன் என்ற மக்கள் நோக்குடன் வெளியிட்ட இந்தச் சுற்றுப்பயணத்தில், விஜய் தனது பேச்சுகளில் அரசியலின் பழைய முறைகளைத் துறந்து, மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு பேசி வருகிறார்.
இது அவரது ரசிகர்களையும், இளைஞர்களையும், பெண்களையும் கவர்ந்துள்ளது. அதேசமயம் ஆளும் திமுக அரசையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. திருச்சியில் நடந்த முதல் பொதுக்கூட்டத்தில், விஜய் தனது பேச்சைத் தொடங்கினார்.
கட்சி தொடங்கிய போது விஜய்க்கு ஆதரவு கொடுத்து வந்த சீமான், சமீப நாட்களில் விஜயை விமர்சித்து வருகிறார். விஜயின் தொண்டர்களை அணில்கள் என்று விமர்சித்துள்ளார். இதனால் சீமான் மீது கடும் கோபத்தில் உள்ளனர் தவெக தொண்டர்கள். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இதையும் படிங்க: தண்ணீர்லையே அடுப்பு எரியுமாம்! மாபெரும் கண்டுபிடிப்பு... வாழ்த்துகளை பகிர்ந்த சீமான்
அப்போது, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை எதிர்த்து பேசினால் தி.மு.க. கைக்கூலி என்று கூறுவதாக தெரிவித்தார். விஜயை விமர்சிப்பதால் தி.மு.க.விடம் நான் பெட்டி வாங்கி விட்டதுபோல் பேசுவதாகவும் கூறினார். தி.மு.க.வை எதிர்த்து பேசினால் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் கைக்கூலி எனக் கூறுவதாகவும் தேர்தலில் தி.மு.க. தனித்து நின்று போட்டியிட வேண்டும் என்றும் கூறினார். ஓட்டுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்றும் அவர் பேசினார்.
இதையும் படிங்க: மறுபடியுமா! விஜய் விட நயன்தாரா வந்தா கூட்டம் இன்னும் அள்ளும்… சீமான் செம்ம கலாய்