AGNI 5!! எதிரிகளை அலறவிட்ட அக்னி 5 சோதனை வெற்றி!! 5,000 கி.மீ தூரம் தள்ளி இருந்தாலும் தப்பிக்க முடியாது!!
அணு ஆயுதங்களை ஏந்திக்கொண்டு 5 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு சென்று தாக்கும் திறன் படைத்த அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. இது இந்திய பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் வலிமை சேர்த்துள்ளது.
இந்தியாவோட பாதுகாப்பு வலிமையை இன்னொரு படி மேல தூக்கியிருக்கு அக்னி 5 ஏவுகணை! அணு ஆயுதங்களை சுமந்து 5,000 கி.மீ. தூரத்துக்கு பறந்து சென்று இலக்கை துல்லியமா தாக்குற இந்த அக்னி 5 ஏவுகணையோட சோதனை, ஒடிசாவுல உள்ள சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் (ITR) ஆகஸ்ட் 20, 2025 அன்று வெற்றிகரமா நடந்து முடிஞ்சிருக்கு.
இந்த சோதனை, இந்தியாவோட ஸ்ட்ராட்டிஜிக் போர்சஸ் கமாண்ட் (SFC) தலைமையில நடத்தப்பட்டது. எல்லா தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு அளவீடுகளும் சிறப்பாக இருந்ததா பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்திருக்கு. இந்த வெற்றி, இந்தியாவோட அணு ஆயுத பலத்தை உலக அரங்கில் மறுபடியும் காட்டியிருக்கு
அக்னி 5, கண்டம் விட்டு கண்டம் பாயுற (ICBM) ஏவுகணை. இதை (DRDO) உருவாக்கியிருக்கு. மூணு நிலை திட எரிபொருள் இன்ஜினால் இயக்கப்படுற இந்த ஏவுகணை, சாலை வாகனங்களில் எளிதா கொண்டு செல்லக்கூடிய கேனிஸ்டர் அமைப்பு கொண்டது. இதனால, எங்க வேணும்னாலும் வேகமா கொண்டு போய் ஏவ முடியும். 17.5 மீட்டர் நீளமும், 50 டன் எடையும் கொண்ட இந்த ஏவுகணை, மணிக்கு 29,400 கி.மீ. வேகத்தில் (மாக் 24) பறந்து இலக்கை தாக்கும்.
இதையும் படிங்க: 400 கி.மீ தூரத்தில் இருந்தாலும் எதிரி காலி.. பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி..!
இதோட ரேஞ்ச் அதிகாரப்பூர்வமா 5,000 கி.மீ.ன்னு சொன்னாலும், சில அறிக்கைகள் 7,000-8,000 கி.மீ. வரைக்கும் போகும்னு கூறுது. இதனால, சீனாவோட பீஜிங், ஷாங்காய் உட்பட வடக்கு பகுதிகளையும், ஆசியாவின் பெரும்பாலான இடங்களையும், ஐரோப்பாவின் சில பகுதிகளையும் இந்த ஏவுகணை தாக்க முடியும்.
அக்னி 5-ஓட சிறப்பு என்னன்னா, இதோட MIRV (Multiple Independently Targetable Re-entry Vehicle) தொழில்நுட்பம். ஒரே ஏவுகணையில 4-6 அணு ஆயுதங்களை சுமந்து, வெவ்வேறு இலக்குகளை தாக்க முடியும். இந்த தொழில்நுட்பம், எதிரியோட ஏவுகணை தடுப்பு அமைப்புகளை முறியடிக்க உதவுது.
மார்ச் 2024-ல நடந்த ‘மிஷன் திவ்யாஸ்த்ரா’ சோதனையில் இந்த MIRV திறன் முதல் முறையா வெற்றிகரமா சோதிக்கப்பட்டது. இப்போ நடந்த சோதனை, ஏற்கனவே பயன்பாட்டில் இருக்குற அக்னி 5-ஓட செயல்பாட்டு திறனை உறுதி செய்யுற வழக்கமான பயிற்சி சோதனையாம்.
இந்த ஏவுகணையோட வளர்ச்சி 2012-ல ஆரம்பிச்சது. இதுவரை 9 முறை வெற்றிகரமா சோதிக்கப்பட்டிருக்கு. முதல் சோதனை ஏப்ரல் 2012-ல நடந்தது. 2018-ல இருந்து இந்திய ஸ்ட்ராட்டிஜிக் போர்சஸ் கமாண்டில் இந்த ஏவுகணை சேர்க்கப்பட்டு, இப்போ முழு அளவிலான பயன்பாட்டுக்கு தயாராகுது.
இதோட கேனிஸ்டர் அமைப்பு, ஏவுகணையை சீல் செய்யப்பட்ட நிலையில் பாதுகாப்பா வைச்சு, தேவைப்படும்போது உடனடியா ஏவ உதவுது. இது இந்தியாவோட ‘நோ ஃபர்ஸ்ட் யூஸ்’ அணு ஆயுத கொள்கையை பலப்படுத்துது, அதே சமயம் எதிரிகளுக்கு பதிலடி கொடுக்க தயாரா இருக்குறதை உறுதி செய்யுது.
இந்த சோதனை, சீனாவோட வளர்ந்து வர்ற அணு ஆயுத திறனுக்கு எதிரான இந்தியாவோட முக்கியமான பதிலடியா பார்க்கப்படுது. சீனாவுக்கு 600 அணு ஆயுதங்கள் இருக்குற நிலையில், இந்தியாவுக்கு 180 இருக்கு. இந்த அக்னி 5, சீனாவோட DF-41 மாதிரியான ஏவுகணைகளுக்கு சவால் விடுற மாதிரி வடிவமைக்கப்பட்டிருக்கு.
இதோடு, இந்தியாவோட அணு ஆயுத முக்கோணம் (நிலம், கடல், வான்வழி) மேலும் வலுப்பெறுது. இந்த வெற்றி, ‘ஆத்மநிர்பார் பாரத்’ திட்டத்துக்கும் பெரிய பூஸ்ட். இனி எதிரிகள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், இந்தியாவோட அக்னி 5 முன்னாடி தப்பிக்க முடியாது!
இதையும் படிங்க: சாப்பாடு 70 ரூபாயாம்... என்னங்க அநியாயம்? கொந்தளித்த தவெக தொண்டர்கள்!