பாஜக பிரமுகர் உயிரை பறித்த தோட்டா! பைக்கில் தப்பிய கொலையாளிகள்! ஒடிசாவில் பயங்கரம்!
ஒடிசாவில், பாஜ பிரமுகர் பிடாபஸ் பண்டா என்பவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். படுகொலைக்கான காரணம் என்ன என்பது முழு விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் பேர்ஹம்பூர் மாவட்டத்தில் உள்ள பிரம்ம நகரில், பாஜக உள்ளூர் பிரமுகரும் மூத்த வழக்கறிஞருமான பிடாபஸ் பண்டா (50), இரண்டு பைக்கில் வந்த மர்ம நபர்களால் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தப் படுகொலை சம்பவம், பேர்ஹம்பூரை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
போலீஸ் தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகிறது. வழக்கறிஞர்கள் சங்கம், அக்டோபர் 8 அன்று மாநிலம் தழுவிய அடைப்புப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
அக்டோபர் 6 (திங்கள்கிழமை) இரவு 10 மணியளவில், பண்டா தனது வீட்டுக்கு அருகில் சென்றபோது, இரண்டு பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவரைத் தாக்கினர். அவர்கள் பண்டாவை நெருங்கி, துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். படுகாயமடைந்த பண்டாவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக MKCG மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: காதலனுடன் தனிமையில் இருந்த இளம்பெண்! போட்டோ எடுத்து மிரட்டிய கும்பல்!! அடுத்து நடந்த கொடூரம்!
ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். சம்பவத்தைக் கேட்டு, போலீஸ் மூத்த அதிகாரிகள் - தெற்கு ரேஞ்ச் ஐ.ஜி. நிதி சேகர் உட்பட - சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணைத் தொடங்கியுள்ளனர்.
பிடாபஸ் பண்டா, ஒடிசா பார் கவுன்சில் உறுப்பினராகவும், பாஜகவின் உள்ளூர் பிரமுகராகவும் இருந்தவர். முன்பு காங்கிரஸ்கட்சியில் இருந்து 2024 தேர்தலுக்கு முன் பாஜகவில் இணைந்தவர். RTI செயல்பாட்டாளராகவும், ஊழல் எதிர்ப்புப் போராளியாகவும் அறியப்பட்டவர்.
கஞ்சம் மாவட்ட பாஜகவின் முக்கிய தலைவராக இருந்தார். படுகொலையின் காரணம் இன்னும் தெரியவில்லை. தனிப்பட்ட, தொழில்முறை அல்லது அரசியல் காரணமாக இருக்கலாம் என போலீஸ் அனைத்து கோணங்களையும் விசாரிக்கிறது. குற்றவாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பண்டாவின் உடல் MKCG மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதும், ஒடிசா பாஜக மாநிலத் தலைவர் மன்மோகன் சமால் உடனடியாக அங்கு விரைந்து, உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். "இது பாஜகவுக்கு பேரிழப்பு. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வேண்டும்" என அவர் கூறினார்.
மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் கோகுலானந்தா மல்லிக், பாஜக ஒருங்கிணைப்பு செயலாளர் மனாஸ் மொகந்தி, பேர்ஹம்பூர் எம்எல்ஏ கே. அனில் குமார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். காங்கிரஸ் எம்எல்ஏ சாகர் சாரன் தாஸ், "பாஜக ஆட்சியில் சட்டம் மற்றும் ஒழுங்கு கெட்டுள்ளதாக" விமர்சித்தார்.
இதையும் படிங்க: மீண்டும் ஒன்றிணைந்த ட்ரம்ப் - மஸ்க்! சார்லி கிர்க் நினைவஞ்சலியில் கைகோர்த்த தோழர்கள்!