×
 

பேராசிரியரின் குரூர புத்தி! தட்டி கேட்காத கல்லூரி.. தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி..!

ஒடிசாவில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததால் மாணவி ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ஒடிசாவின் பாலசோர் நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். பேராசிரியரின் தகாத நடவடிக்கை குறித்து கல்லூரி புகார் குழுவிடம் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி அந்த மாணவி புகார் கொடுத்துள்ளார். இருப்பினும் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்க பேராசிரியர் சமீர் குமார் சாஹூ ஏற்க மறுத்ததாக தெரிகிறது. இதனை அடுத்து ஒரு வாரத்திற்குள் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கடந்த 12ஆம் தேதி பாதிக்கப்பட்ட மாணவியுடன் சேர்ந்து கல்லூரிக்குள் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் திடீரென கல்லூரி முதல்வர் அலுவலகம் அருகே மாணவி, தான் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாணவி புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், 95% தீக்காயங்களுடன் வென்டிலேட்டர் உதவியோடு மாணவி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தனர். மேலும், அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறினர். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக ஒடிசா காவல்துறை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த நிலையில், தீக்குளித்த 22 வயது கல்லூரி மாணவி, 3 நாட்களாக உயிருக்கு போராடிய நிலையில், உயிரிழந்தார்.

இதனிடையே, புகாரை வாபஸ் பெறும் படி, கல்லூரியின் முதல்வரும், புகார்கள் குழு உறுப்பினர்களும் அழுத்தம் கொடுத்ததாக மாணவியின் தந்தை குற்றம் சாட்டினார். மேலும் புகாரை வாபஸ் பெறவில்லை என்றால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்றும் கைது செய்யப்படுவீர்கள் என்றும் மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார். இதனை தொடர்ந்து, கல்லூரியின் துறைத் தலைவர் மற்றும் முதல்வர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க: புரி ஜெகன்நாதர் கோவில் தேரோட்டத்தில் பெரும் சோகம்.. கூட்ட நெரிசலில் 3 பக்தர்கள் உயிரிழப்பு..!

இதையும் படிங்க: டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share