×
 

இந்தி திணிப்பால் மொழிகள் அழிகின்றன! அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடும் எச்சரிக்கை!

இந்தி மொழி திணிப்பால் பிற மொழிகள் அழிவதாக அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

பழமையான மொழிகளை இன்றையச் சூழலுக்கு ஏற்பச் சிறப்பித்துக்கொண்டே இருந்தால் மட்டுமே அவை தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும். இந்த நாட்டின் வரலாறு எங்கு எல்லாம் இந்தி மொழி திணிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் பழமையான மொழிகள் காணாமல் போகின்றன,” என்று தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மன்னர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் மிக ஆவேசமாகப் பேசியுள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் நடைபெற்ற ‘உயிர் நிகர் தமிழ்’ ஆவணப் புத்தக வெளியீடு மற்றும் சிறப்பு இணையப்பக்கத் தொடக்க விழாவில் அவர் கூறியதாவது, 

உலகத்தில் பல மொழிகள் பயன்பாட்டில் இல்லாததால் காணாமல் போய்விட்டன. குறிப்பாக, இந்தித் திணிப்பு நடக்கும் இடங்களில் எல்லாம் அந்தந்தப் பிராந்தியப் பழமையான மொழிகள் அழிவைச் சந்திக்கின்றன. தமிழ் மொழிக்காகக் கடந்த நூறு ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் போராடி வருகிறது. அண்ணா வகுத்த இருமொழிக் கொள்கையே தமிழ்நாட்டின் என்றும் நிலைக்கும் கொள்கையாக இருக்கும். செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்தவர் கலைஞர் என்ற பெருமை நமக்கு உண்டு.

இதையும் படிங்க: குடும்பப் பள்ளிகளில் இந்தி, அரசுப் பள்ளிகளில் எதிர்ப்பு! திமுகவை விளாசிய தமிழிசை சௌந்தரராஜன்!

2021-இல் திமுக ஆட்சிக்கு வரும்போது வெளிநாடுகளில் 110 ஆக இருந்த தமிழ்க் கல்வி மையங்கள், தற்போது 202 மையங்களாக உயர்ந்து 42 நாடுகளில் செயல்பட்டு வருகின்றன. 1 லட்சத்திற்கும் மேற்பட்ட டிஜிட்டல் நூல்கள் அடங்கிய நூலகத்தை இதுவரை 17 கோடி முறை மக்கள் பார்வையிட்டுள்ளனர். ஏஐ (AI) உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித் தமிழ் மொழியை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தி வருகிறோம்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும், மூத்த ஆய்வாளருமான ஆர். பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் பேசுகையில், "தமிழ் என்பது வெறும் இனத்தின் மொழி அல்ல; அது ஒரு நாகரிகத்தின் மொழி. இந்தியா அச்சேறிய முதல் மொழி தமிழ் தான். தமிழர்கள் கடல் அறிந்தவர்கள்; உலகமே போற்றும் அறிவு சார்ந்த சமுதாயம்" எனத் தமிழ் மொழியின் தொன்மையை விளக்கினார்.

இதையும் படிங்க: “இந்திக்கு இங்கே இடமில்லை!” - மொழிப்போர் தியாகிகள் நாளில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி முழக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share