ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம்... அள்ளாடும் மக்கள்... விளாசிய EPS...!
ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் பேசி சமூக தீர்வு காண எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி இருக்கிறார்.
அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற இடங்களுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பயணிகளைச் சுமந்து செல்லும் ஆம்னி பேருந்துகள், தற்போது ஒரு கடுமையான போராட்டத்தின் நடுவே திகைத்து நிற்கின்றன. ஒரு வார காலமாக ஆம்னிப் பேருந்து உரிமையாளர்கள் போராடி வருகின்றனர். அவர்களின் வேலை நிறுத்தத்தால் மக்கள் பயணம் செய்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. விரைவில் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். தமிழக ஆம்னி பேருந்துகள் மீது அண்டை மாநில அரசுகள் அபராதம் விதிப்பதால் அவர்களது தொழில் நலிவடையும் நிலையில் உள்ளதாகக் கூறி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கடந்த ஒன்பதாம் தேதி இரவு முதல் பேருந்துகளை இயக்காமல் போராடி வருவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வார காலமாக ஆம்னி பேருந்துகள் வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படாததால் தமிழக பயணிகள் பிற மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள இயலாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இதையும் படிங்க: அவசரப்படாதீங்க... ஆம்னி பேருந்து உரிமையாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமைச்சர்...!
எனவே, திமுக அரசின் போக்குவரத்துத்துறை இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் தங்களது பயணத்தை சிரமம் இல்லாமல் மேற்கொள்ள வழிவகை காண வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: #Breaking கேரள எல்லையில் நிற்கும் ஆம்னி பேருந்துகள்... தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு...!