×
 

திக்... திக்...!! - அந்தரத்தில் தொங்கிய ஆம்னி பேருந்து - மரண பீதியில் கதறிய பயணிகள் - 35 பேரின் நிலை என்ன?

விக்கிரவாண்டி  அருகே இன்று அதிகாலையில் அதிவேகமாக வந்த ஆம்னி பேருந்து சங்கராபரணி ஆற்று பாலத்தில் மோதி தொங்கியது - 35 பேர் காயம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 35 பேர் பலத்த காயம் அடைந்ததாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. 

சென்னையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து, இன்று காலை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி அருகே பேரணி என்ற இடத்தில் சங்கராபணி ஆற்று பாலத்தில் மோதி தடுப்பு கட்டையில் ஏரி நின்று விபத்துக்குள்ளானது. அதிக வேகம் காரணமாக ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து சென்டர் மீடியாத்தின் மீது  மோதி இரண்டு பாலத்திற்கு நடுவில் சிக்கிக்கொண்டு அந்தரத்தில் தொங்கியதாக முதற்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன.  

 இதில் பேருந்தில் வந்த பயணிகள் சுமார் 35 பேர்  படுகாயம் அடைந்தனர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்ததோடு, மீட்பு பணிகளிலும் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக  முண்டியம்பாக்கத்தில்  உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  ஆற்றில் தண்ணீர் இருக்கும் நிலையில் பேருந்து கவிழாமல் தடுப்பு கட்டையில் மோதி தொங்கி இருந்ததால் பெரும் உயிரிழப்பு விபத்து தவிர்க்கப்பட்டது

இதையும் படிங்க: #BREAKING அதிகாலையிலேயே பயங்கரம்...!!  7 பேருந்துகள், 3 கார்கள் அடுத்தடுத்து மோதி தீ விபத்து... கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை...!

இதுகுறித்து விக்ரவாண்டி காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விபத்தால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்கு பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: வேதனையின் உச்சம்... ஆந்திரா பேருந்து விபத்து... இறந்தவர்களுக்கு துயரத்துடைப்பு நிதி... பிரதமர் மோடி அறிவிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share