×
 

சென்னைக்கு வருகிறது 840 டன் வெங்காயம்! கிலோ ரூ.35க்கு விற்க மத்திய அரசு அதிரடி! விலை உயர்வுக்கு செக்!

நாட்டின் முக்கிய வெங்காய சந்தைகளில் ஒன்றான லாசல்கான் ஏபிஎம்சியில் கடந்த நான்கு நாட்களில் சராசரி விலை குவிண்டாலுக்கு ரூ.4,250-ல் இருந்து ரூ.3,800 ஆக குறைந்துள்ளது.

வெங்காயத்தின் சில்லறை விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், சென்னையில் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, மத்திய அரசின் கையிருப்பில் இருந்து 840 டன் வெங்காயம் இன்று ஆகஸ்ட் 29-ம் தேதி சென்னைக்கு அனுப்பப்பட உள்ளது. மன்மாட் பகுதியில் வெங்காயத்தை சிறப்பு சரக்கு ரயிலில் ஏற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பருவமழை தாமதம் மற்றும் சில பகுதிகளில் போதிய மழை இல்லாததால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கமாக டெல்லி, சென்னை, கேரளா, அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சில்லறை விற்பனை விலை அதிகரித்துள்ளது. பல சந்தைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.50 முதல் ரூ.65 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு தனது கையிருப்பை சந்தையில் விடுகிறது.

இதற்காக ‘கண்டா எக்ஸ்பிரஸ்’ எனப்படும் சிறப்பு சரக்கு ரயில்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் 500 டன் வெங்காயம் டெல்லிக்கு அனுப்பப்பட்ட நிலையில், தற்போது சென்னைக்கு 840 டன் வெங்காயம் அனுப்பப்படுகிறது. சென்னை மட்டுமின்றி எர்ணாகுளம், மதுரை, கவுகாத்தி உள்ளிட்ட நகரங்களுக்கும் ரயில் மூலம் வெங்காயம் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வெங்காய விலை தாறுமாறு உயர்வு! களத்தில் இறங்கிய மத்திய அரசு! இன்று முதல் முக்கிய நடவடிக்கை!

மத்திய அரசு வெங்காயத்தை ரயில் மூலம் அனுப்புவதுடன், சாலை வழியாகவும் அதிக விலை நிலவும் பகுதிகளுக்கு கையிருப்பை கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளது. டெல்லி மற்றும் கவுகாத்திக்கு ஏற்கனவே லாரிகள் மூலம் வெங்காயம் அனுப்பப்பட்டுள்ளன. இதன் மூலம் அதிக விலை நிலவும் சந்தைகளில் உடனடியாக விநியோகத்தை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வெங்காய விலையை கட்டுப்படுத்த நாபெட் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் 1.21 லட்சம் டன் வெங்காயத்தை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது. இந்த கையிருப்பில் இருந்து ‘கண்டா எக்ஸ்பிரஸ்’ மூலம் அனுப்பப்படும் வெங்காயம், நாபெட், என்சிசிஎப் மற்றும் கேந்திரிய பண்டார் விற்பனை நிலையங்கள் வழியாக கிலோ ரூ.35 என்ற மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே, மத்திய அரசின் கையிருப்பு வெளியீட்டின் தாக்கம் மொத்த விற்பனை சந்தையிலும் தெரிகிறது. நாட்டின் முக்கிய வெங்காய சந்தைகளில் ஒன்றான லாசல்கான் ஏபிஎம்சியில் கடந்த நான்கு நாட்களில் சராசரி விலை குவிண்டாலுக்கு ரூ.4,250-ல் இருந்து ரூ.3,800 ஆக குறைந்துள்ளது. இது சுமார் 10 சதவீத சரிவாகும்.

எனினும், மத்திய அரசின் கையிருப்பு வெளியீடு மட்டும் சில்லறை விலையை உடனடியாக ரூ.35 ஆகக் குறைக்கும் என்று கூற முடியாது. சென்னையில் விநியோகம் அதிகரித்த பிறகே அதன் உண்மையான தாக்கம் சில்லறை சந்தையில் தெரியவரும். தற்போது வெங்காய விலை உயர்வால் அவதிப்படும் பொதுமக்களுக்கு, 840 டன் கையிருப்பு வருகை சற்று நிம்மதியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சொகுசு வீடுகளுக்கு சிக்கல்.. 15 நாள் தான் டைம்..!! ECR-ல் அதிரடி காட்டும் தமிழக அரசு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share