சூதாட்ட செயலி விவகாரம்... விஜய் தேவரகொண்டாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை... சலசலப்பு...!
ஆன்லைன் சூதாட்ட செயலை விளம்பரத்தில் நடித்த விவகாரத்தின் விசாரணைக்காக விஜய் தேவரகொண்டா ஆஜராகி உள்ளார்.
தெலுங்கு சினிமாவின் உயர்ந்த நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா, அவரது திரைப்படங்கள் மூலம் பெற்ற பிரபலத்தைத் தாண்டி, சமூக ஊடகங்களில் தொடர்ந்து பேசப்படும் ஒரு சர்ச்சையின் மையத்தில் நிற்கிறார். 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கிய இந்த வழக்கு, சட்டவிரோத சூதாட்ட செயலிகளை (online betting apps) விளம்பரப்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது வெறும் சினிமா நட்சத்திரத்தின் பிரச்சினையாக மட்டுமல்லாமல், இளைஞர்களின் நிதி இழப்புகள், சமூக பாதிப்புகள் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகளின் விரிவான பின்னணியைக் கொண்டுள்ளது. குறிப்பாக, விஜய் தேவரகொண்டா A23 Rummy, Yolo247, Fairplay Live, Jeet Win போன்ற செயலிகளை பாப்-அப் விளம்பரங்கள் மூலம் ஊக்குவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த விளம்பரங்கள், பயனர்கள் தேடல் செய்யாமலேயே தோன்றி, இளைஞர்களை இலக்காகக் கொண்டிருந்ததாக போலீஸ் தெரிவித்தது.
ஆன்லைன் செயலிகள் மூலம் மக்கள் பணத்தை இழப்பது, இதனால் கடும் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை போன்ற விபரீத முடிவுகள் எடுப்பது போன்ற செயல்பாடுகளை செய்கின்றனர். பல்வேறு இன்னல்களுக்கு காரணமாக இந்த ஆன்லைன் சூதாட்ட செய்திகள் இருப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கௌரவம்..!! 'செவாலியர்' விருதுக்கு சொந்தக்காரரானார் தோட்டா தரணி..!! முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!!
இது தொடர்பான விசாரணை தொடர்ந்த நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட செயலை விளம்பரத்தில் நடித்தது தொடர்பான வழக்கு விசாரணைக்காக நடிகர் விஜய் தேவரகொண்டா ஆஜர் ஆனார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள SIT அலுவலகத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா ஆஜராகி உள்ளார். அவரிடம் சூதாட்ட செயலி விளம்பரம் மற்றும் பரிவர்த்தனைகள் உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: ககன்யான் திட்டத்திற்கான ‘பாராசூட்’ சோதனை வெற்றி..!! ISRO-வின் முக்கிய மைல்கல்..!!