×
 

தப்பா பேசிட்டேன்.. மன்னிச்சுடுங்க கார்கே!! பார்லிமென்டில் SORRY சொன்ன நட்டா..!!

உணர்ச்சி வேகத்தில், பிரதமர் மோடியை விமர்சித்து பேசிய அவரது வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒரு பரபரப்பான விவாதம் நடந்துச்சு. இது பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவாதம். இதுல எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியோட மூத்த தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே ஒரு மணி நேரம் ஆவேசமா பேசினார்.

அவர் பிரதமர் நரேந்திர மோடி மேல சில கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வச்சு, அரசாங்கத்தோட பாதுகாப்பு குறைபாடுகளை கடுமையா விமர்சிச்சார். இது ஆளுங்கட்சியை கோபப்படுத்த, மத்திய அமைச்சரும் அவை முன்னவருமான ஜே.பி.நட்டா எழுந்து கார்கேவை கடுமையா தாக்கி பேசினார். இந்த சம்பவம் மாநிலங்களவையில் பெரிய சலசலப்பை உண்டாக்கியது. 

மாநிலங்களவையில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதம் நடந்தப்போ, கார்கே எழுந்து ஒரு மணி நேரம் பேசினார். அவர் பிரதமர் மோடியோட தலைமையை கேள்வி கேட்டு, பஹல்காம் தாக்குதல் நடந்தப்போ அரசு எடுத்த நடவடிக்கைகளை விமர்சிச்சார்.

இதையும் படிங்க: அனல் பறக்க காத்திருக்கும் பார்லிமென்ட்.. ஆபரேஷன் சிந்தூர் குறித்து மோடி, அமித் ஷா உரை..!

குறிப்பா, மோடி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு வராம, பீகார்ல தேர்தல் பிரச்சாரத்துக்கு போனதை கிண்டல் பண்ணி பேசினார். இது பாஜக உறுப்பினர்களை எரிச்சலாக்கியது. கார்கேவோட பேச்சு மோடியோட பிம்பத்தை குறைக்குற மாதிரி இருந்ததால, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கடுப்பாச்சு.

கார்கே பேசி முடிச்சவுடனே, ஜே.பி.நட்டா எழுந்து கடுமையா பதிலடி கொடுத்தார். “கார்கேவுக்கு மனநிலை பிறழ்ந்துடுச்சு”னு ஆவேசமா சொன்னார். மோடியைப் பத்தி கார்கே பேசின வார்த்தைகள் ஆட்சேபனைக்குரியவைன்னு சொல்லி, அவையோட பதிவுகளில் இருந்து அந்த வார்த்தைகளை நீக்கணும்னு கேட்டார்.

நட்டாவோட இந்த பேச்சு அவையில் பெரிய சலசலப்பை உருவாக்கியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதுக்கு கடுமையா எதிர்ப்பு தெரிவிச்சாங்க.

நட்டாவோட பேச்சுக்கு பதிலளிக்க கார்கே மறுபடி எழுந்தார். “நட்டா என்னை மனநிலை சரியில்லாதவர் மாதிரி சொன்னது வருத்தமா இருக்கு. இந்த பாஜக அரசுல நான் மதிக்கிற சில அமைச்சர்களுல நட்டாவும் ஒருத்தர். ஆனா, அவரே இப்படி பேசினது வெட்கக்கேடு”னு உணர்ச்சி வேகத்தோட சொன்னார்.

இதுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆதரவா குரல் கொடுத்து, நட்டா மன்னிப்பு கேட்கணும்னு கோரிக்கை வைச்சாங்க. அவையில் சத்தம், கூச்சல், பரபரப்பு எல்லாம் உச்சத்துக்கு போயிடுச்சு.

எதிர்க்கட்சிகளோட கோரிக்கைக்கு பிறகு, நட்டா மன்னிப்பு கேட்டார். “நான் சொன்ன வார்த்தைகளை திரும்பப் பெற்றேன். பிரதமர் மோடி உலகமே பாராட்டுற தலைவர். இது பாஜகவுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே பெருமை. ஆனா, கார்கே மோடியைப் பத்தி ஆட்சேபனைக்குரிய வார்த்தைகள்ல பேசினது ஏத்துக்க முடியாது.

இருந்தாலும், என் வார்த்தைகள் கார்கேவை காயப்படுத்தி இருந்தா, மன்னிப்பு கேட்டுக்கிறேன். ஆனா, கார்கேவோட வரம்பு மீறிய பேச்சையும் அவைப் பதிவுகளில் இருந்து நீக்கணும்”னு சொன்னார். இதனால அவையில் பதற்றம் கொஞ்சம் தணிஞ்சுது.

இதையும் படிங்க: தப்பிச்சிரலாம்னு நினைக்காதீங்க.. ஆதாரம் இருக்கு! தேர்தல் ஆணையத்தை அலற விட்ட ராகுல்காந்தி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share