×
 

ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தானுக்கு தகவலா? குற்றம்சாட்டும் ராகுல் காந்தி.. வெளியுறவுத்துறை விளக்கம்..!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுக்கும் முன்பாக பாகிஸ்தான் அரசுக்கு தெரிவிக்கப்பட்டதா என்று ராகுல் காந்தி எழுப்பிய பிரச்சனைக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுக்கும் முன்பாக பாகிஸ்தான் அரசுக்கு தெரிவிக்கப்பட்டதா என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எழுப்பிய பிரச்சனைக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்தது. பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருக்கும் தீவிரவாதிகளையும், அவர்களின் 9 முகாம்கள், கட்டமைப்புகளை இந்திய ராணுவம் அழித்தது. இந்த தாக்குதல் நடத்தும் முன் பாகிஸ்தான்  அரசிடம் தீவிரவாதிகளின் முகாம்களை மட்டும் குறிவைத்து தாக்க உள்ளதாக தகவல் தெரிவித்ததாக மத்திய வெளியுறவத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா ஒரு பாக். உளவாளி..! சதி வேலையை முறியடித்த ஹரியானா போலீஸ்..!

இது குறித்து காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் கடுமையாக விமர்சித்து, கேள்வி எழுப்பியிருந்தார். அதில், “ பாகிஸ்தான் அரசிடம் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து தகவல் தெரிவிக்க யார் அதிகாரம் அளித்தது. தாக்குதலுக்கு முன்பாகவே தகவல் தெரிவித்தது குற்றமாகும். வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளிப்படையாகவே இந்திய அரசு செய்ததாகதெரிவித்தது. யார் அதிகாரம் அளித்தது, இந்த தாக்குதலில் நம்முடைய எத்தனை விமானங்கள் சேதமடைந்தன” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

அது மட்டுமல்லாமல் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆப்ரேஷன் சிந்தூர் குறித்த பல்வேறு தகவல்களையும், இந்தியா பதிலடியாக தீவிரவாதிகளின் கட்டமைப்புகளை அழித்தது குறித்தும் ஊடகங்களிடம் தெரிவித்த வீடியோவையும் ராகுல் காந்தி இணைத்திருந்தார்.

ராகுல் காந்தியின் இந்த விமர்சனத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை இன்று விளக்கம் அளித்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட விளக்கத்தில் “ ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கிய நிலையில் நாங்கள் பாகிஸ்தானுக்கு இது குறித்து தகவல் தெரிவித்தோம். இதைத்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் பாகிஸ்தானுக்கு எங்கள் நடவடிக்கை குறித்து எச்சரித்தோம் என்று தெரிவித்திருந்தது.

ஆனால், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பாகவே பாகிஸ்தானுக்கு எச்சரி்க்கை விடுக்கப்பட்டதுபோன்று பேசுவது முற்றிலும் உண்மைக்கு மாறானது. உண்மைகளை தவறாக சித்தரித்து பேசப்பட்டுள்ளது” என விளக்கம் அளி்க்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியா கொடுத்த மரண அடி.. நள்ளிரவில் பாக்., பிரதமருக்கு போன் போட்டு அலறிய தளபதி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share