×
 

மோடி கிட்ட சொல்லச்சொன்ன பயங்கரவாதி; தேடி, தேடி அழித்த இந்தியன் ஆர்மி...!

குறிப்பாக பஹல்காமில் தாக்குதலின் போது  கர்நாடகாவின் சிவமொக்காவை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மஞ்சுநாத் ராவ் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஆபரேஷ் சிந்தூர் என்ற துல்லிய தாக்குதல் மூலமாக எல்லை தாண்டி பயங்கரவாதத்திற்கு எதிரான நாடு இந்தியா என்பதை இன்று உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி உணர்த்தியிருக்கிறார். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்த இந்தியா, திடீரென இன்று நாடு முழுவதும் போர் ஒத்திகையை அறிவித்திருந்தது. ஆனால் பாகிஸ்தானே எதிர்பார்க்காத வகையில் அதிகாலை ஒன்றே கால் மணியிலிருந்து 1:35 மணி வரைக்கும் சரியாக 25 நிமிடங்களில் பாகிஸ்தானின் முக்கிய பயங்கரவாத அமைப்புகளின் 9 இடங்களை இந்தியா ரஃபேல் விமானம் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு தாக்கி தும்சம் செய்துள்ளது. 

குறிப்பாக பஹல்காமில் தாக்குதலின் போது  கர்நாடகாவின் சிவமொக்காவை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மஞ்சுநாத் ராவ் சுட்டுக்கொல்லப்பட்டார். மகனின் விடுமுறைக்காக சுற்றுலா சென்ற அந்த குடும்பம் மீள முடியாத துயரத்தில் சிக்கியது. அவரது மனைவியான பல்லவி கண்ணீர் மல்க பேசிய வீடியோ ஊடகங்களில் வெளியாகி நாட்டையே கொந்தளிக்க வைத்தது. அதில், “பயங்கரவாதியும் என் முன்னாடி நின்னுட்டு இருந்தான் நான் அவனிடம் நீ என் கணவரை கொன்னுட்ட என்னையும் கொன்னுடுன்னு கேட்டேன். என்னோட மகனும் அவனிடம் நாயே நீ என் தந்தையை கொன்னுட்ட இப்ப எங்க ரெண்டு பேரையுமே கொன்னுடுன்னு கேட்டான். அதற்கு அவன் சொன்ன பதில் எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. நான் உன்னை கொல்ல மாட்டேன். இங்கே நடந்ததைப் போய் மோடியிடம் புகார் செய் என்று சொன்னான் அப்புறம் அவன் அங்கிருந்து போய்விட்டார்” என இவ்வாறாக பல்லவி தீவிரவாதிகளுடன் செய்த வாக்குவாதத்தை பற்றி விவரித்திருந்தார். 

இதையும் படிங்க: மோடி அரசின் சரியான பதிலடி.. "ஆப்ரேஷன் சிந்தூர்" குறித்து அமித் ஷா பெருமிதம்..!

இதனையடுத்து நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் விடமாட்டேன் என பிரதமர் மோடியும் சூளுரைத்திருந்தார். இன்று அதனை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செய்து காட்டியிருக்கிறது. பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட லஷ்கர் இ தொய்பாவின்  மூன்று முக்கிய பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் இன்று பொடிப்பொடியாக்கியுள்ளது. பர்னாலாவில் இருந்த மர்கஸ் அஹ்லே ஹதீஸ், முசாபராபாத் இருந்த ஷவாய் நல்லா கேம்ப் என்ற லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளின் 3 முகாம்கள் தரைமட்டமாகியுள்ளன.  இதில் இருந்த பெரும்பாலான பயங்கரவாதிகள் மண்ணோடு, மண்ணாக்கப்பட்டுள்ளனர். இது பிரதமர் மோடியின் சபதத்தை நிறைவேற்றிய செயலாகவே பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: இன்று மாலை காங். காரிய கமிட்டி கூட்டம்! என்னென்ன விவாதிக்கலாம்... தீவிர ஆலோசனை நடத்த திட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share