×
 

3 முறை அதிமுக முதலமைச்சர்! அம்மா விசுவாசி To அறிவாலயம்!! ஓபிஎஸ் கடந்து வந்த பாதை!

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அவருடன் அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத்தும் திமுகவில் இணைந்தார்.

தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சி! மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்து, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) இன்று (பிப்ரவரி 27, 2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அவருடன் மகன் ரவீந்திரநாத் (முன்னாள் எம்பி) மற்றும் உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பனும் கட்சியில் இணைந்தனர்.

அண்ணா அறிவாலயத்துக்கு வந்த ஓபிஎஸ்ஐ துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் வரவேற்றனர். முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து ஆரத்தழுவினார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அறிவாலயம் முன்பு திரண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

75 வயதான ஓபிஎஸ் 1973 முதல் அதிமுகவில் இருந்து பல உயர் பதவிகளை வகித்தவர் – முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர், பொருளாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பல. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 'ஒற்றைத் தலைமை' விவகாரத்தில் ஈபிஎஸ்உடன் மோதல் ஏற்பட்டு, கட்சியில் ஓரங்கட்டப்பட்டார். அதன்பிறகு 'அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு' தொடங்கி தனி அணியாக செயல்பட்டார்.

இதையும் படிங்க: திமுக துணை பொதுச்செயலாளார் ஓபிஎஸ்?! அதற்குள் பதவியா? தேனி, போடியில் மீண்டும் போட்டி?!

தனிக் கட்சி தொடங்கினால் அதிமுகவுடன் தொடர்பு அறுந்துவிடும் என அஞ்சி, தனி அணியாக இருந்தபடியே அதிமுகவுக்குள் திரும்ப முயன்றார். ஆனால் ஈபிஎஸ் எந்த நிபந்தனையும் இன்றி சேர அனுமதிக்கவில்லை. பாஜகவும் உதவவில்லை. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறினார். சில ஆதரவாளர்கள் திமுக, தவெக, தாய்க்கழகம் போன்றவற்றில் சேர்ந்தனர்.

ஜெயலலிதா பிறந்தநாள் கூட்டத்தில் விரக்தியுடன் "இனி நான் என்ன சங்கர மடத்துக்கா போவேன்?" என விம்மிய ஓபிஎஸ், பிறகு மகன் சகிதம் ஸ்டாலினை சந்தித்தார். சமீபத்தில் சட்டமன்ற இறுதி நாளில் தலைமைச் செயலகத்தில் பூங்கொத்து கொடுத்து, "திமுக அரசு சிறப்பாக செயல்பட்டது, மீண்டும் ஆட்சிக்கு வரும்" என புகழ்ந்தார். உசிலம்பட்டி ஐயப்பனும் சட்டமன்றத்தில் ஸ்டாலினை வாழ்த்தினார்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறுகையில், "ஈபிஎஸ் அழுத்தம் கொடுத்தால் கூட்டணி விட்டுச் செல்வார் என பாஜக பயந்தது. விஜய் தவெக போக மறுத்தார். திமுக தரப்பு உரிய மரியாதை, ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு என உத்தரவாதம் அளித்ததால் இணைந்தார்" என்கின்றனர்.

2026 தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த இணைப்பு திமுகவுக்கு தென்மாவட்டங்களில் பெரும் வலு சேர்க்கும். அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சி! தமிழக அரசியல் இனி எப்படி திரும்பும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
 

இதையும் படிங்க: கண்ட்ரோலை என்கைல கொடுங்க!! 40 பேருக்கு சீட்! லிஸ்டுடன் தயாரான உதயநிதி ஸ்டாலின்! திமுகவில் பரபரப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share